பொது செய்தி

இந்தியா

இடுக்கி அணையில் நீர்திறப்பு நிறுத்தம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
மூணாறு--கேரளா இடுக்கி அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் 'ரெட் அலர்ட்' வாபஸ் பெறப்பட்டது. நவ.18ல் திறக்கப்பட்ட ஒரு மதகு அடைக்கப்பட்டது.நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழை, முல்லைபெரியாறு அணை திறப்பால் இடுக்கி அணை அக்.19, நவ.14, 18 ஆகிய நாட்களில் திறக்கப்பட்டது. நவ.18ல் ஒரு மதகு 40 செ.மீ., உயர்த்தப்பட்டு பெரியாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணை நீர்மட்டம் உயர்ந்தபடி

மூணாறு--கேரளா இடுக்கி அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் 'ரெட் அலர்ட்' வாபஸ் பெறப்பட்டது. நவ.18ல் திறக்கப்பட்ட ஒரு மதகு அடைக்கப்பட்டது.

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழை, முல்லைபெரியாறு அணை திறப்பால் இடுக்கி அணை அக்.19, நவ.14, 18 ஆகிய நாட்களில் திறக்கப்பட்டது. நவ.18ல் ஒரு மதகு 40 செ.மீ., உயர்த்தப்பட்டு பெரியாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணை நீர்மட்டம் உயர்ந்தபடி இருந்ததால் நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு 40 செ.மீட்டரில் இருந்து 80 செ.மீ.,க்கு மதகு உயர்த்தப்பட்டு வினாடிக்கு 85 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இதற்கிடையே மழை குறைந்ததால் நீர்வரத்தும் குறைந்தது. நேற்று முன்தினம் இரவு 10:15 மணிக்கு அணை நீர்மட்டம் 399.98 அடியாக இருந்தபோது மதகு அடைக்கப்பட்டது. அணை நீர்மட்டம் 'ரூல்கர்வ்' அட்டவணைப்படி பராமரிக்கப்பட்டதால் கடந்த ஒருமாதமாக அமலில் இருந்த பெரியாற்றின் கரையோரப்பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கைக்கான 'ரெட் அலர்ட்' நேற்று காலை வாபஸ் பெறப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X