கொங்கு நகரில் எங்கெங்கு காணினும் லொள்| Dinamalar

கொங்கு நகரில் எங்கெங்கு காணினும் 'லொள்'

Added : நவ 21, 2021
Share
தெரு நாய்களால் வாகன ஓட்டிகளுக்கு சிக்கல்கட்டட கழிவுகளை அகற்றணும்மாநகராட்சி, 94வது வார்டுக்கு உட்பட்ட, மாச்சம்பாளையம், ரயில்வே பொங்காளிகோனார் வீதியில், சாலையை ஆக்கிரமித்து, குவிக்கப்பட்டுள்ள கட்டட இடிபாடுகளால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது; பறக்கும் துாசியால், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.- ராஜ்மோகன், ரயில்வே பொங்காளிகோனார் வீதி.தெருநாய்கள்

தெரு நாய்களால் வாகன ஓட்டிகளுக்கு சிக்கல்

கட்டட கழிவுகளை அகற்றணும்மாநகராட்சி, 94வது வார்டுக்கு உட்பட்ட, மாச்சம்பாளையம், ரயில்வே பொங்காளிகோனார் வீதியில், சாலையை ஆக்கிரமித்து, குவிக்கப்பட்டுள்ள கட்டட இடிபாடுகளால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது; பறக்கும் துாசியால், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.- ராஜ்மோகன், ரயில்வே பொங்காளிகோனார் வீதி.

தெருநாய்கள் தொல்லை!மாநகராட்சி, 41வது வார்டுக்குட்பட்ட, கணபதி மாநகர், கொங்கு நகரில், தெருநாய்கள் தொல்லையால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கிருஷ்ணமூர்த்தி, கொங்கு நகர்

தண்ணீர் வீண்!வடவள்ளி, கல்வீரம்பாளையம், நால்வர் நகர் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக, குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வெளியேறி வருகிறது.- புவனேஸ்குமார். கல்வீரம்பாயம்

சாலை மோசம்போத்தனுார், செட்டிபாளையம் சாலை மிகவும் மோசமாக உள்ளது.- பத்ரிநாத், ஜி.டி.டேங்க்

குப்பையால் சுகாதார கேடு இருகூர், மாணிக்கம் நகர் பகுதியில், சரிவர குப்பை அள்ளப்படாமல் உள்ளது. மலைபோல் தேங்கி கிடக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.- ஸ்ரீசாய், மாணிக்கம் நகர்

தெருவிளக்கு பிரச்னைமாநகராட்சி, 35வது வார்டுக்குட்பட்ட, தீபா மில் மெயின் ரோட்டில் மால்பரோ கம்பெனியின் முன், தெரு விளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் சாலையை கடக்க பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.- ரவீந்திரராஜ், பி.எம்.ஆர்.லே அவுட்

துர்நாற்றம் வீசுதுவெள்ளக்கிணர் பிரிவு, 43வது வார்டுக்கு உட்பட்ட, வி.கே.வி.அபார்ட்மென்ட் குடியிருப்பு பகுதியில், 10 நாட்களாக குப்பை எடுக்காமல் துர்நாற்றம் வீசுகிறது.- மணிகன்டன், வெள்ளக்கிணர் பிரிவு

சாலையில் ஓடும் தண்ணீர்மாநகராட்சி, 64வது வார்டுக்குட்பட்ட காமராஜர் ரோடு நான்கு முக்கு சந்திப்பில், ஒரு மாதத்திற்கும் மேலாக, குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் ஓடிக் கொண்டிருக்கிறது.- தேவராஜ், காமராஜர் ரோடு

சாலை மோசம்சரவணம்பட்டி விமல் ஜோதி பள்ளி அருகே உள்ள சாலை, சிதிலமடைந்து படுமோசமாக காட்சியளிக்கிறது. பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு சாலையை சீரமைக்க வேண்டும்.- அருண், சரவணம்பட்டி

சுவிட்ச் பழுதுசிட்ரா - காளப்பட்டி சாலையில் அமைந்துள்ள மின்விளக்குகளின் கன்ட்ரோல் சுவிட்ச், பழனிசாமி காலனியின் முதல் வீதியில் உள்ளது. தற்போது, இந்த ஆட்டோமெட்டிக் சுவிட்ச் வேலை செய்யாமல் உள்ளது.- நடராஜன், காளப்பட்டி

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X