கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பெண் குத்திக்கொலை; கார்பெண்டருக்கு ஆயுள்

Added : நவ 21, 2021
Share
Advertisement
சிவகங்கை-சிவகங்கை அருகே பெண்ணை குத்திக்கொலை செய்த கார்பெண்டருக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.திருநெல்வேலி அருகே பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் துரைராஜ் 52. இவர் கார்பெண்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது.இவர் சிவகங்கை டி.புதுார் பகுதியை சேர்ந்த உமா மகேஸ்வரியுடன் திருமணம் செய்யாமல் கணவன் மனைவியாக வாழ்ந்து
 பெண் குத்திக்கொலை; கார்பெண்டருக்கு ஆயுள்

சிவகங்கை-சிவகங்கை அருகே பெண்ணை குத்திக்கொலை செய்த கார்பெண்டருக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

திருநெல்வேலி அருகே பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் துரைராஜ் 52. இவர் கார்பெண்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது.இவர் சிவகங்கை டி.புதுார் பகுதியை சேர்ந்த உமா மகேஸ்வரியுடன் திருமணம் செய்யாமல் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளார். உமாமகேஸ்வரி மீது துரைராஜ் சந்தேகமடைந்து அடிக்கடி தகராறு செய்துள்ளார். 2014 ஏப்., 27 ல் துரைராஜ் தகராறு செய்து உமாமகேஸ்வரியை கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்தில் பலியானார்.

சிவகங்கை நகர் போலீசார் துரைராஜை கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை சிவகங்கை செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி சுமதி சாய் பிரியா, துரைராஜூக்குஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X