தமிழ்நாடு

சிவகங்கை அருகே இரண்டாயிரம் ஆண்டு பழமையான உருக்காலை கண்டுபிடிப்பு

Added : நவ 21, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை அருகே அரசனேரி கீழமேடு பேச்சிகுளம் கண்மாய் பகுதியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த இரண்டாயிரம் ஆண்டு பழமையான இரும்பு உருக்காலை இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சிவகங்கை தொல்நடை குழுவை சேர்ந்த அரசனேரி கீழமேடு கா.சரவணன் என்பவர் அளித்த தகவலின் பேரில் தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் காளிராஜா, தலைவர் சுந்தரராஜன், செயலர் நரசிம்மன், உறுப்பினர்கள்
சிவகங்கை அருகே இரண்டாயிரம் ஆண்டு பழமையான உருக்காலை கண்டுபிடிப்பு

சிவகங்கை : சிவகங்கை அருகே அரசனேரி கீழமேடு பேச்சிகுளம் கண்மாய் பகுதியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த இரண்டாயிரம் ஆண்டு பழமையான இரும்பு உருக்காலை இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை தொல்நடை குழுவை சேர்ந்த அரசனேரி கீழமேடு கா.சரவணன் என்பவர் அளித்த தகவலின் பேரில் தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் காளிராஜா, தலைவர் சுந்தரராஜன், செயலர் நரசிம்மன், உறுப்பினர்கள் சேதுபதி, பிரவீன், கார்த்தி ஆகியோர் கீழமேடு பேச்சி குளம் பகுதியை ஆய்வு செய்தனர்.

புலவர் காளிராஜா தெரிவித்ததாவது: பெருங்கற்காலத்தில் இரும்பை உருக்கும் அறிவினை தமிழர்கள் பெற்றிருந்தனர்.ஒவ்வொரு சிற்றுார்களிலும் தமக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய இயற்கை சார்ந்த சூழலை மக்கள் பெற்றிருந்தனர். பானைகளை தயாரித்தல், மரவேலைகளை செய்தல், இரும்பு உருக்கும் தொழில் நுட்பத்தையும் முழுமையாக பெருங்கற்காலத்தில் பயன்படுத்தியதை ஆய்வுகளில் காண முடிகிறது.


வட்ட வடிவ உலைகள்


கீழமேடு பேச்சிக்குளம் கண்மாய் பகுதியில் தரையோடு ஒட்டியதாக வட்ட வடிவிலான உலைகள் சிதைவுற்று இரும்பு கழிவுகுவியல்கள் காணப்படுகின்றன. செம்பிராங்கல் என்ற மூலப்பொருளில் இருந்து இரும்பினை பிரித்து எடுத்திருப்பது தெரிய வருகிறது. இந்த உலைகளில் கல்லை கொதிநிலைக்கு கொண்டு வந்து இரும்பினை பிரித்து எடுத்துள்ளனர்.


சுடுமண் குழாய்கள்


சுடு மண்ணால் ஆன குழாய்கள் சிதைவுற்று கிடக்கின்றன. இவை உலை அமைப்புகளை எரியூட்டுவதற்கான துருத்தி போல துாரத்திலிருந்து காற்று கொண்டு போக பயன்படுத்தியிருக்கலாம்.இரும்புகளை உருக்கி கம்பி வடிவமாக கருவிகள் செய்வதற்கும் குழாய் அமைப்புகளை பயன்படுத்தியிருக்கலாம்.

அரசனேரி கீழமேடு சிவகங்கையை அடுத்த விரிவாக்கப்பகுதியாக இது இருந்தாலும்அரசன்ஏரி கீழமேடு என்பது அரசனையும், தொன்மை சார்ந்த மேட்டையும் குறிப்பதாககருத முடிகிறது. கல்லங்குத்தல் என இப்பகுதியை மக்கள் பேச்சு வழக்கில் அழைக்கின்றனர். புதுக்கோட்டை பகுதியில் இரும்பு உருக்கு ஆலைகள் தொடர்ச்சியாக இருந்ததற்கான சான்றாக 13 ம் நுாற்றாண்டு பாண்டிய மன்னன் வீரபாண்டியன் காலக்கல்வெட்டு செய்தியும், புதுக்கோட்டை சமஸ்தான புள்ளிவிவர செய்திக்குறிப்பும் ஆய்வாளர்களால் குறிப்பிடப்பட்டுள்ளன.

சிவகங்கை பகுதியிலும் இரும்பு உருக்காலை இருந்ததற்கான எச்சங்கள் கிடைத்திருப்பது தொல்நடைக்குழுவிற்கு மகிழ்ச்சியளிக்கிறது. இதனை தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வு செய்து, பாதுகாக்கவும் வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X