உரம் இருப்பு விபர பலகை வைக்க விவசாயிகள் கோரிக்கை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உரம் இருப்பு விபர பலகை வைக்க விவசாயிகள் கோரிக்கை

Added : நவ 21, 2021
Share
தேவகோட்டை : தேவகோட்டை தாலுகாவில் உரத்திற்கு தட்டுப்பாடு நிலவுகிறது. கூட்டுறவு சங்கங்களிலும் உரம் கிடைக்கவில்லை. தனியார் கடைகளில் கூடுதல் விலைக்கு விவசாயிகள் வாங்க வேண்டிய நிலை காணப்படுகிறது. வெளிமார்க்கெட்டில் விவசாயிகளுக்கு தேவை இல்லாத வேறு உரங்களை வாங்க சொல்லி கட்டாயபடுத்துகின்றனர்.இது குறித்து தினமலர் நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வந்தன. மாவட்ட நிர்வாகம்

தேவகோட்டை : தேவகோட்டை தாலுகாவில் உரத்திற்கு தட்டுப்பாடு நிலவுகிறது. கூட்டுறவு சங்கங்களிலும் உரம் கிடைக்கவில்லை. தனியார் கடைகளில் கூடுதல் விலைக்கு விவசாயிகள் வாங்க வேண்டிய நிலை காணப்படுகிறது.

வெளிமார்க்கெட்டில் விவசாயிகளுக்கு தேவை இல்லாத வேறு உரங்களை வாங்க சொல்லி கட்டாயபடுத்துகின்றனர்.இது குறித்து தினமலர் நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வந்தன. மாவட்ட நிர்வாகம் அனைத்து கூட்டுறவு சங்கத்திற்கும் யூரியா , டி.ஏ.பி உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுத்தனர்.இது குறித்து விவசாயி மாணிக்கம் கூறியதாவது: கூட்டுறவு சங்கங்களில் உரம் வைத்து உள்ளனர்.

ஆனால் இல்லை என்கின்றனர். விற்பனையில் வெளிப்படை தன்மை இல்லை. ஓரிரு நாளில் காலியாகி விட்டதாக கூறுகிறார்கள். உரம் வந்தது விற்றது இருப்பு பற்றி விபர பலகை வைக்க வேண்டும். கூட்டுறவு உயர் அதிகாரிகள் விவசாய நேரத்தில் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X