ராமேஸ்வரம்,--இனிமேல் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என ராமேஸ்வரம் மீனவர்களிடம் இலங்கைக்கான இந்திய துாதர் கோபால் பக்லே தெரிவித்தார்.
நேற்று ராமேஸ்வரம் வந்த கோபால் பக்லே, மீனவர்கள் மீன்களை இறக்கும் பாம்பன் குந்துகால் பாலம், தனுஷ்கோடி பாலத்தில் உள்ள வசதிகள், மீன்களை பதப்படுத்தும் கட்டமைப்புகளை ஆய்வு செய்தார். பின் ராமேஸ்வரத்தில் தமிழக மீன்துறை கூடுதல் கமிஷனர் சஜன்சிங், மீன்துறை கூடுதல் இயக்குநர் ஆறுமுகம், ராமநாதபுரம் கலெக்டர் சங்கர்லால் குமாவட் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
ராமேஸ்வரம் மீனவர் சங்க நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.பின் ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் போஸ் கூறியதாவது:இலங்கை கடற்படை தாக்குதலில் தமிழக மீனவர்கள் பலி, படகுகள், வலைகள் மூழ்கடிப்பு, இலங்கை வசமுள்ள படகுகள் மீட்க முடியாமல் உள்ளதால், மீனவ குடும்பத்தினர் வாழ்வாதாரம் இழந்து கடனில் சிக்கி உள்ளதாக கூறினோம்.அதற்கு இந்திய துாதர், 'இனிமேல் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது. உடமைகள் சேதமடையாது என்றார். சில நாட்களுக்கு முன் மீனவர் உயிரிழந்த சம்பவத்திற்கு இலங்கைக்கு கண்டனம் தெரிவித்ததாகவும், அந்நாடு நீதிமன்றம் விடுவித்த படகுகளை மீட்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார் என தெரிவித்தார்.----
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE