விபத்தை ஏற்படுத்தும் குடிநீர் திட்ட பள்ளம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
கண்டவராயன்பட்டி : திருப்புத்துார் அருகே கண்டவராயன்பட்டியில் குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்டுள்ள துளையால் விபத்துக்கள் நடக்கின்றன.கண்டவராயன்பட்டி வழியாக திருப்புத்துாருக்கு காவிரிக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திட்டத்திற்காக பெரிய குழாய்கள் மூலம் குடிநீர் செல்கிறது. பையூர் விலக்கு அருகே குழாயில் ஏர்வால்வு தொட்டியில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்து

கண்டவராயன்பட்டி : திருப்புத்துார் அருகே கண்டவராயன்பட்டியில் குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்டுள்ள துளையால் விபத்துக்கள் நடக்கின்றன.

கண்டவராயன்பட்டி வழியாக திருப்புத்துாருக்கு காவிரிக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திட்டத்திற்காக பெரிய குழாய்கள் மூலம் குடிநீர் செல்கிறது. பையூர் விலக்கு அருகே குழாயில் ஏர்வால்வு தொட்டியில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்து குழியாக உள்ளது. ரோட்டை ஓட்டியுள்ளதால் வாகனத்தில் வருபவர்கள் அந்த பள்ளத்தில் விழும் நிலை உருவாகியுள்ளது.

இரவில் அப்பகுதியில் வெளிச்சம் இல்லாததால் பலரும் அதில் விழுந்து காயமடைகின்றனர்.பல முறை இந்த பிரச்னை குறித்து கிராமத்தினர் அதிகாரிகளிடத்தில் வலியுறுத்தியும் இதற்கு நிரந்தர பாதுகாப்பு நடவடிக்கை ஏற்படுத்தப்படாமல் உள்ளது. ஏர்வால்வை வேறு இடத்திற்கு மாற்ற கிராமத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X