பொது செய்தி

தமிழ்நாடு

வி.ஏ.ஓ., அலுவலகத்தில் நனையும் ஆவணங்கள்

Added : நவ 21, 2021
Share
Advertisement
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் பழுதாகி மழைநீர் ஒழுகுவதால் ஆவணங்கள் நனைந்து வீணாகின்றன.இத்தாலுகாவில் சதுர்வேதமங்கலம் கிராம வி.ஏ.ஓ., அலுவலகம், ஊராட்சி அலுவலகத்தையொட்டி அமைந்துள்ள பாழடைந்த பழைய கட்டடத்தில் இயங்கி வருகிறது. இக்கட்டடத்தின் மேல்தளம், சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற ஆபத்தான நிலையில்

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் பழுதாகி மழைநீர் ஒழுகுவதால் ஆவணங்கள் நனைந்து வீணாகின்றன.

இத்தாலுகாவில் சதுர்வேதமங்கலம் கிராம வி.ஏ.ஓ., அலுவலகம், ஊராட்சி அலுவலகத்தையொட்டி அமைந்துள்ள பாழடைந்த பழைய கட்டடத்தில் இயங்கி வருகிறது. இக்கட்டடத்தின் மேல்தளம், சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற ஆபத்தான நிலையில் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். மழைகாலங்களில் கட்டடத்தின் நிலை மோசமாக உள்ளது. சில வாரங்களாக பெய்யும் மழை காரணமாக உள்ளே இருந்த பல ஆவணங்கள் தண்ணீரில் நனைந்து வருகின்றன. பழைய கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X