பொது செய்தி

தமிழ்நாடு

பாயாசம் செய்யப்போறீங்களா லேடீஸ்? இந்த ஜவ்வரிசி மேட்டரை முதல்ல படிங்க

Added : நவ 21, 2021
Share
Advertisement
கோவை:'பளிச்சிடும் வெண்மை கொண்டதாக ஜவ்வரிசி இருந்தால், அது நிச்சயம் ரசாயன கலப்பு கொண்டதாகத்தான் இருக்கும். எனவே, பாயாசம் செய்யும் இல்லத்தரசிகள் கவனமாக இருக்க வேண்டும்' என்கின்றனர், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.இல்லங்களில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளின் உணவுப் பட்டியலில், பாயாசத்துக்கும் நிச்சயம் இடம் இருக்கும். பிறந்த நாள், திருமண நாள் என நல்ல நாட்களில்

கோவை:'பளிச்சிடும் வெண்மை கொண்டதாக ஜவ்வரிசி இருந்தால், அது நிச்சயம் ரசாயன கலப்பு கொண்டதாகத்தான் இருக்கும். எனவே, பாயாசம் செய்யும் இல்லத்தரசிகள் கவனமாக இருக்க வேண்டும்' என்கின்றனர், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.இல்லங்களில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளின் உணவுப் பட்டியலில், பாயாசத்துக்கும் நிச்சயம் இடம் இருக்கும். பிறந்த நாள், திருமண நாள் என நல்ல நாட்களில் இல்லத்தரசிகள் செய்யும் பாயசம், குடும்பத்தினர் மீதான அவர்களது அன்புக்கும், பாசத்துக்கும் ஆதாரம்.இத்தகைய முக்கியத்துவம் கொண்ட பாயாசம் தயாரிப்பதற்கான முக்கிய மூலப்பொருள் ஜவ்வரிசி. அதில் செய்யப்படும் கலப்படம் பற்றி, இன்னும் பல இல்லத்தரசிகள் அறியாமலே இருக்கின்றனர்.பளிச்சிடும் வெண்மையுடன் இருந்தால் மட்டுமே, அது தரமான ஜவ்வரிசி என்ற எண்ணம், பலரிடம் இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பை ஈடு செய்வதற்காக, ஜவ்வரிசி ஆலைகளில் கால்சியம் ஹைபோ குளோரைட் ரசாயனத்தை கலந்து விடுகின்றனர்.மாவை வெண்மையாக்கும் பிளீச்சிங் பவுடர் அல்லது சல்பர் போன்றவற்றையும் கலக்கின்றனர். டால்கம் பவுடரை கூட கலந்து விடும் கொடுமையும் நடக்கிறது. இப்படி ஏதாவது தில்லாலங்கடி வேலை செய்தால் மட்டுமே, ஜவ்வரிசி பளீர் வெண்மை நிறத்தில் இருக்கும். ஏனெனில் கலப்படம் இல்லாத சுத்தமான ஜவ்வரிசி, மங்கலான நிறம் கொண்டதாகவே இருக்கும். ஜவ்வரிசியை வேக வைத்தால், கலப்படம் இல்லாத ஜவ்வரிசி உருண்டைகள் மட்டுமே பருத்து பெரிதாகும்.'இந்த வித்தியாசங்களை அறிந்து கொண்டால் மட்டுமே, ஜவ்வரிசி பாயாசம் அன்புக்கு மட்டுமல்ல; ஆயுளுக்கும் ஆதாரமாக இருக்கும்' என்கின்றனர் உணவுப் பாதுகாப்புத்துறையினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X