பொது செய்தி

தமிழ்நாடு

கிருதுமால் நதியில் தண்ணீர் திறப்பு: போக்குவரத்து துண்டிப்பு

Added : நவ 21, 2021
Share
Advertisement
திருப்புவனம் : திருப்புவனம் அருகே கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து சிவகங்கை -விருதுநகர் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.பழையனுாரைச் சுற்றிலும் ஓடாத்துார், வல்லாரேந்தல், எஸ்.வாகைகுளம், சிறுவனுார், சேந்தநதி, உள்ளிட்ட 12 கிராமங்கள் உள்ளன. சிவகங்கை மாவட்டம் மட்டுமல்லாது விருதுநகர் மாவட்ட கிராமங்களும் உள்ளன. கிராமமக்கள் உரம்,

திருப்புவனம் : திருப்புவனம் அருகே கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து சிவகங்கை -விருதுநகர் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

பழையனுாரைச் சுற்றிலும் ஓடாத்துார், வல்லாரேந்தல், எஸ்.வாகைகுளம், சிறுவனுார், சேந்தநதி, உள்ளிட்ட 12 கிராமங்கள் உள்ளன. சிவகங்கை மாவட்டம் மட்டுமல்லாது விருதுநகர் மாவட்ட கிராமங்களும் உள்ளன. கிராமமக்கள் உரம், விதை நெல்,காய்கறி உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் பழைனுாரை நம்பியே உள்ளனர். அரசு பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம் என அனைத்து தேவைகளுக்கும் பழையனுார் வந்து செல்கின்றனர்.

பழையனுார் வழியாக இரண்டு அரசு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. டூவீலர், சரக்கு வாகனங்கள் மட்டுமே இப்பாதையில் சென்று வருகின்றன. பஸ் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஓடாத்துார் ஊராட்சி தலைவர் சந்தான ராஜலட்சுமி: கிருதுமால் நதியில் வருடத்திற்கு இரண்டு மாதங்கள் தண்ணீர் தேங்கி நிற்கும், இந்த இடத்தில் உயர் மட்ட பாலம் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். இன்று வரை தீர்வு இல்லை. மூன்று நாட்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வல்லாரேந்தல் வேலு: தரைப்பாலம் சேதமடைந்ததை தொடர்ந்து கடந்தாண்டு நபார்டு வங்கி மூலம் மீண்டும் தரைப்பாலம் கட்டப்பட்டது.

பாலம் கட்டுமான பணியின் போதே சிமென்ட் குழாய்கள் வைத்து கட்ட வலியுறுத்தினோம், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. தற்போது மழைக்கு இடுப்பளவு தண்ணீர் செல்கிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட மக்களும் வர முடியவில்லை. 5 கி.மீ.,துாரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது.

ஓடாத்துார் பொன்னழகு: 2 வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. தற்போது பள்ளி திறந்து ஒரு மாதம் கூட இல்லை. கிருதுமால் நதியில் தண்ணீர் செல்வதால் மீண்டும் மாணவர்களின் கல்வி கேள்விகுறியதாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X