பொது செய்தி

தமிழ்நாடு

ஜெயலலிதா - கருணாநிதி படம் அம்மா உணவகத்தில் அகற்றம்

Added : நவ 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை- -மதுரை, சுந்தரராஜபுரம் அம்மா உணவக பெயர் பலகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்துடன், முன்னாள் முதல்வர் கருணாநிதி படம் வைக்கப்பட்டு, சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நேற்று பெயர் பலகை முற்றிலுமாக அகற்றப்பட்டது.ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவு வழங்க, 2013ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா, சென்னையில் அம்மா உணவகம் துவங்கினார். பின் மாநில அளவில் 700 உணவகங்கள்
 ஜெயலலிதா - கருணாநிதி படம் அம்மா உணவகத்தில் அகற்றம்

மதுரை- -மதுரை, சுந்தரராஜபுரம் அம்மா உணவக பெயர் பலகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்துடன், முன்னாள் முதல்வர் கருணாநிதி படம் வைக்கப்பட்டு, சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நேற்று பெயர் பலகை முற்றிலுமாக அகற்றப்பட்டது.

ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவு வழங்க, 2013ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா, சென்னையில் அம்மா உணவகம் துவங்கினார். பின் மாநில அளவில் 700 உணவகங்கள் துவங்கப்பட்டன. கடந்த வாரம், மதுரை சுந்தரராஜபுரம் அம்மா உணவகத்தில், பல ஆண்டுகளாக பணிபுரிந்த மகளிர் சுய உதவி குழுவினரை மாநகராட்சி நிர்வாகம் வெளியேற்றி, வேறு குழுவினரை பணியில் அமர்த்தியது.தொடர் புகார் வந்ததால் வெளியேற்றப்பட்டதாக நிர்வாகம் கூறிய நிலையில், 'எந்த தவறும் செய்யாத எங்களை வெளியேற்றியதில் ஆளுங்கட்சியினர் தலையீடு உள்ளது' என பணியாளர்கள் குற்றம் சாட்டினர்.இந்நிலையில், ஆளுங்கட்சியினர் தலையீடு இருப்பதை நிரூபிக்கும் வகையில், நேற்று முன்தினம் சுந்தரராஜபுரம் அம்மா உணவக பெயர் பலகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்துடன் கருணாநிதி படமும் வைக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியதால்,

நேற்று இருவர் படங்களுடன் கூடிய பெயர் பலகை முற்றிலும் அகற்றப்பட்டது. அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறியதாவது:மதுரையில் செயல்படும் 12 அம்மா உணவகங்களில், திருமங்கலம் உணவகத்திற்கு பலசரக்கு, காய்கறி வினியோகிக்கும் வியாபாரிகளுக்கு ஆறு மாதங்களாக பணம் வழங்கப்படவில்லை. இதனால், உணவகம் செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டு, ஏழைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சூழலில் உணவக பெயர் பலகையில் 'அய்யா' படத்தை வைத்து திட்டத்தை திதை திருப்புகின்றனர். அய்யா படம் வைக்க காட்டும் முனைப்பை, ஏழை மக்களுக்கு உணவு வழங்குவதில் தி.மு.க., அரசு காட்ட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
W W - TRZ,இந்தியா
22-நவ-202109:29:00 IST Report Abuse
W W அம்மாவும் வேண்டாம் அப்பாவும் வெண்டாம்,ஜய்யாவும் வெண்டாம் ,அரசு உணவகம் என்று இருந்தாலே போதும் .யருடைய போட்டொவும் வேண்டாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X