ரேஷன்கடை பணியாளர்கள் அலறல்: அய்யோ...பொங்கல் பரிசா! வேண்டும் முழு முன்னேற்பாடுகள்| Dinamalar

தமிழ்நாடு

ரேஷன்கடை பணியாளர்கள் 'அலறல்': அய்யோ...பொங்கல் பரிசா! வேண்டும் முழு முன்னேற்பாடுகள்

Updated : நவ 22, 2021 | Added : நவ 21, 2021
Share
கோவை:தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பு கிடைக்கும் நாளை, பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்க, 'அது பரிசல்ல. எங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை' என, ரேஷன்கடை ஊழியர்கள் புலம்பித்தீர்க்கின்றனர்.பொங்கல் பண்டிகைக்கு, கரும்பு, வெல்லம் உள்ளிட்ட 20 பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசு வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பரிசு என அறிவித்தாலும், முறையான
ரேஷன்கடை பணியாளர்கள் 'அலறல்': அய்யோ...பொங்கல் பரிசா! வேண்டும் முழு முன்னேற்பாடுகள்

கோவை:தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பு கிடைக்கும் நாளை, பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்க, 'அது பரிசல்ல. எங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை' என, ரேஷன்கடை ஊழியர்கள் புலம்பித்தீர்க்கின்றனர்.

பொங்கல் பண்டிகைக்கு, கரும்பு, வெல்லம் உள்ளிட்ட 20 பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசு வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பரிசு என அறிவித்தாலும், முறையான ஏற்பாடுகள் இல்லாததால், இது எங்களுக்குப் பெரும் தண்டனை என, ரேஷன் கடை ஊழியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக, ரேஷன் கடை விற்பனையாளர்கள் சிலர் கூறியதாவது:கடந்த முறை கொரோனா தொகுப்பு வழங்கியபோது, பொருட்கள் கடைக்கு வரவில்லை. 20 கி.மீ., தொலைவிலுள்ள குடோனில் இருந்து, ஏற்றுக்கூலி, வண்டி வாடகை என, சொந்த செலவில் கடைக்கு கொண்டு வந்தோம்.ஆயிரம் கார்டுதாரர்கள் கொண்ட கடைக்கு தலா 14 பொருட்களுக்கே, 30 மூட்டைகள் வரை இருக்கும். இந்த மூட்டைகளை வைக்க கடையில் இடம் போதாது.குடோனில் சில பொருட்கள் வந்திருக்காது. இருக்கும் பொருளிலும் 50 சதவீதம்தான் தருவர். காத்திருந்து ஏற்றி வர, நள்ளிரவு ஆகி விடும். இது போன்ற நேரங்களில் பெண் விற்பனையாளர்கள் நிலையை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

முந்திரி, திராட்சை அரைகுறை முந்திரி, திராட்சை தலா 20 கிராம். ஏலம் 4 கிராம் நாங்கள்தான் பேக் செய்ய வேண்டும். எங்களிடம் உள்ள எடை இயந்திரம் 10 கிராம் அளவில்தான் காட்டும். 4 கிராம் காட்டும் இயந்திரத்துக்கு என்ன செய்வது? திராட்சை 20 கிலோ பெட்டியில், பெட்டியின் எடையே 1.6 கிலோ போய்விடும். பற்றாக்குறை எங்கள் தலையில் விழும்.'கசக்கும்' வெல்லம் பேக்கிங்வெல்லத்தை பேக்கிங் செய்து கொடுத்துவிட்டால் பரவாயில்லை. உருண்டை வெல்லமாக இருப்பின், உடைத்து பேக் செய்வது சிரமம்.கடந்த முறை கரும்பு துண்டுகள் கொடுத்தார்கள். இப்போது ஒரு முழு கரும்பு தர வேண்டும்.

ஆயிரம் கரும்புகளை கடைக்குள் வைத்து பாதுகாப்பது சிரமம். இதற்குப் பதிலாக பணமாகக் கொடுத்திருக்கலாம்.கடந்த முறை கொடுத்த பை 14 பொருட்களுக்கே போதவில்லை. இம்முறை பெரிய அளவிலான பை, கார்டு எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரே தவணையில் கொடுக்க வேண்டும்.ஒரே நாளில் 300 பேருக்கு வினியோகிக்க வேண்டும் என்றால், ஒரே விற்பனையாளர் பேக் செய்து கொடுத்துவிட முடியாது. கைக்காசில் கூலிக்கு ஆள் அமர்த்த வேண்டும்.முதல்வர் கவனிக்கணும்இப்பிரச்னையில் முதல்வர் தலையிட்டு, கட்சியினர் ரேஷன் கடையில் கூடுவதைத் தவிர்க்க உத்தரவிட வேண்டும். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், பேக் செய்த பணிக்காக, ஒரு கார்டுக்கு ஒரு ரூபாய் வீதம் ஊக்கத்தொகை அளித்தனர்.

அதுபோன்று தற்போதும் அளித்தால், உதவிக்கு வைத்துக் கொள்ளும் ஆட்களுக்கு கைக்காசு செலவு செய்யத் தேவையில்லை.அனைத்துப் பொருட்களையும், பையில் முன்கூட்டியே போட்டு, முழு பேக்கிங் ஆக கொடுத்து விட்டால், வினியோகிக்க எளிதாக இருக்கும்.கொள்முதல் செய்யும் ஒப்பந்ததாரரிடமே பேக்கிங் பணியையும் ஒப்படைத்து விடலாம். ஓரிரு நாட்களிலேயே நெரிசல் இன்றி அனைவருக்கும் வினியோகிக்க முடியும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

கட்சிக்காரர்கள் தொல்லை
முதல்வர் தடுப்பாரா?'நிவாரண உதவி கொடுத்தபோதே, கட்சியினர் தொல்லை அதிகமாக இருந்தது. நிகழ்ச்சியை துவக்கி வைத்து, ஓரிரு போட்டோவுக்கு போஸ் கொடுத்தால் பரவாயில்லை. நாள் முழுக்க போட்டோவுக்கு போஸ் கொடுத்து, மக்களை எரிச்சலூட்டுகின்றனர்.உள்ளாட்சித் தேர்தலை மனதில் கொண்டு, கட்சியினர் பலரும் தங்களை முன்னிறுத்திக் கொள்ள, கடைகளில் குவிவர். இதனால், எங்களுக்குதான் சங்கடம். குறிப்பாக ஆளுங்கட்சியினரை நினைத்தால் அச்சமாக இருக்கிறது' என்கின்றனர் ஊழியர்கள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X