பொது செய்தி

தமிழ்நாடு

'மிஸ்-சி' நோய் பாதித்த 60 குழந்தைகள் நலம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
கோவை:கோவை அரசு மருத்துவமனையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் 'மிஸ்-சி' நோயால் பாதிக்கப்பட்ட, 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் நவீன சிகிச்சை மூலம் பூரண குணமடைந்துள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கோவை அரசு மருத்துவமனையில் கடந்த, 60 ஆண்டுகளாக குழந்தைகள் நல பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு, கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து குழந்தைகள்

கோவை:கோவை அரசு மருத்துவமனையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் 'மிஸ்-சி' நோயால் பாதிக்கப்பட்ட, 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் நவீன சிகிச்சை மூலம் பூரண குணமடைந்துள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கோவை அரசு மருத்துவமனையில் கடந்த, 60 ஆண்டுகளாக குழந்தைகள் நல பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு, கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து குழந்தைகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா பாதிப்பிற்கு பிறகு குழந்தைகளை தாக்கக்கூடிய, 'மிஸ்-சி' என்ற உயிர்க்கொல்லி நோய்க்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில், நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை குழந்தைகளை தாக்கியது. அவசர சிகிச்சை பிரிவில் நவீன சிகிச்சை அளிக்கப்பட்டது.நோயை குணமாக்க தேவையான மருந்துகள் முதல்வர் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக அளிக்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் 'மிஸ்-சி' பாதிப்பிலிருந்து பூரண குணமடைந்துள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளுக்கு சிறந்த சிகிச்சைகோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கேரளா, கர்நாடகா போன்ற பகுதிகளிலிருந்து நாளொன்றுக்கு, 20 முதல் 30 பச்சிளம் குழந்தைகள், உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். அதில், 70 சதவீத எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, 85 சதவீத குழந்தைகள் குணமடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X