பொது செய்தி

தமிழ்நாடு

திருப்புத்துாரில் மாட்டு வண்டி பந்தயம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
திருப்புத்துார் : திருப்புத்துார் சிங்கம்புணரி ரோட்டில் மருதுபாண்டியர் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.அமைச்சர் பெரியகருப்பன் துவக்கினார்.பத்து கி.மீ.துாரத்திற்கான பெரியமாடுகளுக்கான போட்டியில் 22 ஜோடிகள் பங்கேற்றன. முதல்பரிசை சீவலப்பேரி சுப்பையா பாண்டியன், 2ம் பரிசை அவனியாபுரம் மோகன், 3ம் பரிசை நல்லாங்குடி முத்தையா

திருப்புத்துார் : திருப்புத்துார் சிங்கம்புணரி ரோட்டில் மருதுபாண்டியர் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

அமைச்சர் பெரியகருப்பன் துவக்கினார்.பத்து கி.மீ.துாரத்திற்கான பெரியமாடுகளுக்கான போட்டியில் 22 ஜோடிகள் பங்கேற்றன. முதல்பரிசை சீவலப்பேரி சுப்பையா பாண்டியன், 2ம் பரிசை அவனியாபுரம் மோகன், 3ம் பரிசை நல்லாங்குடி முத்தையா பெற்றனர். எட்டு கி.மீ.துாரத்திற்கான சிறிய மாடு பிரிவில் 44 ஜோடிகள் பங்கேற்றதால் இரு போட்டிகளாக நடத்தப்பட்டது.

முதல் சுற்று போட்டியில் முதல்பரிசை வள்ளியூர் ஆனந்த், 2வது பரிசை வடகுடி நெல்லியண்டவர், 3வது பரிசை மாவிலங்காவயல் சுந்தரபாண்டியன், இரண்டாவது சுற்று போட்டியில் முதல் பரிசை சுண்ணாம்பிருப்பு ராஜமுடி, 2வது பரிசை பரளி சித்தார்த், 3வது பரிசை கோ.வேலங்குடி ராஜசேகர் வென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X