பொது செய்தி

தமிழ்நாடு

இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு; 3062 குடியிருப்புகளில் 14 குழு பிரசாரம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த 3062 குடியிருப்புகளுக்கு 14 கலைக்குழுவினர் தேர்வு செய்யப்பட்டு 3 நாட்கள் உண்டு உறைவிட பயிற்சி வழங்கப்பட்டது.தமிழக அரசு இல்லம் தேடி கல்வி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மாணவர்கள் கற்றல் இடைவெளியை குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த கலைக்குழுக்கள் மூலம் பிரசாரம் செய்யவுள்ளனர்.

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த 3062 குடியிருப்புகளுக்கு 14 கலைக்குழுவினர் தேர்வு செய்யப்பட்டு 3 நாட்கள் உண்டு உறைவிட பயிற்சி வழங்கப்பட்டது.

தமிழக அரசு இல்லம் தேடி கல்வி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மாணவர்கள் கற்றல் இடைவெளியை குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த கலைக்குழுக்கள் மூலம் பிரசாரம் செய்யவுள்ளனர். இத்திட்டத்தில் 3062 குடியிருப்புகளுக்கு 14 கலைக்குழுவினர் செல்லவுள்ளனர். ஒரு குழுவில் 9 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த கலைஞர்களுக்கு 3 நாட்கள் உண்டு, உறைவிடப்பயிற்சி திருமாஞ்சோலை பாண்டியன் சரஸ்வதி யாதவ பொறியியல் கல்லுாரியில் நடந்தது.நிறைவு விழாவில் கூடுதல் திட்ட இயக்குநர் ராமேஸ்வர முருகன் பங்கேற்றார். அவர் கலைக்குழுவினர் இல்லம் தேடி கல்வித்திட்டத்தின் குறிக்கோள்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் செயல்பட வேண்டும், என்றார்.

நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் கே.முத்துச்சாமி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயூ, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பிரிட்டோ, சத்யா பங்கேற்றனர். ஒவ்வொரு கலைக்குழுவும் தினமும் 2 பள்ளிகள், 2 குடியிருப்புகளில் விழிப்புணர்வு பிரசாரம்மேற்கொள்ளவுள்ளனர். ஏற்பாடுகளை பாண்டியன் சரஸ்வதி யாதவ கல்வியியல் கல்லுாரி முதல்வர் மாதவன் செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X