பொது செய்தி

தமிழ்நாடு

2 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பு; சிவகங்கை கலெக்டர் தகவல்

Added : நவ 21, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கையில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை ஆய்வு செய்த கலெக்டர் மதுசூதன்ரெட்டி 2 லட்சம் டோஸ்கையிருப்பு உள்ளதாக தெரிவித்தார்.சிவகங்கை நகராட்சி தாய்சேய் நல விடுதி,வாணியங்குடி, சக்கந்தி, கோமாளிப்பட்டி ஆகிய தடுப்பூசி முகாம்களை பார்வையிட்டார்.அவர் தெரிவித்ததாவது: முன்பு வாரம் ஒரு முறை நடத்தப்பட்டு வந்த கொரோனா தடுப்பூசி முகாம் தற்போது வாரத்தில் வியாழன்,

சிவகங்கை : சிவகங்கையில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை ஆய்வு செய்த கலெக்டர் மதுசூதன்ரெட்டி 2 லட்சம் டோஸ்கையிருப்பு உள்ளதாக தெரிவித்தார்.

சிவகங்கை நகராட்சி தாய்சேய் நல விடுதி,வாணியங்குடி, சக்கந்தி, கோமாளிப்பட்டி ஆகிய தடுப்பூசி முகாம்களை பார்வையிட்டார்.அவர் தெரிவித்ததாவது: முன்பு வாரம் ஒரு முறை நடத்தப்பட்டு வந்த கொரோனா தடுப்பூசி முகாம் தற்போது வாரத்தில் வியாழன், ஞாயிறு என இரு தினங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் நோக்கம் 18 வயது நிரம்பியவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டு வருகிறது. 650 முகாம்களில் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்குநிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

உள்ளாட்சி பிரதிநிதிகள்தங்கள் பகுதியில் தடுப்பூசி போடாதவர்கள் இருந்தால் தடுப்பூசி செலுத்திட அறிவுறுத்த வேண்டும். தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் தடுப்பூசி போட்டதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இரு கட்டமாக தடுப்பூசி போடப்படுவதால்தற்போது 2 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது, என்றார்.சிவகங்கை கோட்டாட்சியர் முத்துக்கழுவன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X