ரவுடி வெட்டிக் கொலை 9 பேர் கும்பலுக்கு வலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரவுடி வெட்டிக் கொலை 9 பேர் கும்பலுக்கு வலை

Added : நவ 21, 2021
Share
ஓசூர்-தேன்கனிக்கோட்டை அருகே, ரவுடியை வெட்டிக் கொன்ற ஒன்பது பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த தக்கட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ், 33; கூலித்தொழிலாளி. தேன்கனிக்கோட்டையில் மனைவி, 5 வயது மகளுடன் வசித்தார். இவர் மீது, இரு கொலை, வழிப்பறி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.தேன்கனிக்கோட்டை மாரச்சந்திரத்தைச் சேர்ந்த, கொலை வழக்கில்

ஓசூர்-தேன்கனிக்கோட்டை அருகே, ரவுடியை வெட்டிக் கொன்ற ஒன்பது பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த தக்கட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ், 33; கூலித்தொழிலாளி. தேன்கனிக்கோட்டையில் மனைவி, 5 வயது மகளுடன் வசித்தார். இவர் மீது, இரு கொலை, வழிப்பறி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.தேன்கனிக்கோட்டை மாரச்சந்திரத்தைச் சேர்ந்த, கொலை வழக்கில் தொடர்புடைய மகேஷ்குமார், 34, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் சம்பாதித்தனர்.

ஒரு கட்டத்தில் சுரேஷுக்கு மகேஷ்குமார் சரியாக பணம் வழங்கவில்லை. இதில், அவர்களுக்குள் தகராறு இருந்தது.நேற்று முன்தினம் இரவு, கோவில் ஏலச்சீட்டு எடுப்பது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த மகேஷ்குமார் மற்றும் அவரது தரப்பினர், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சுரேஷை வெட்டி கொலை செய்தனர்.தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, மகேஷ்குமார் உட்பட ஒன்பது பேரை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X