பொது செய்தி

தமிழ்நாடு

இன்றும் நாளையும் முதல்வர் 'விசிட்': கோவை நகர போக்குவரத்தில் மாற்றம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
கோவை:தமிழக முதல்வர் இன்றும், நாளையும் கோவையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதால், நகர போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை: இன்று காலை, 6:00 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை, கனரக வாகனங்களை கோவை மாநகருக்குள் இயக்க அனுமதியில்லை.n அவிநாசி ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் தொட்டிபாளையம் பிரிவில் இருந்து

கோவை:தமிழக முதல்வர் இன்றும், நாளையும் கோவையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதால், நகர போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை: இன்று காலை, 6:00 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை, கனரக வாகனங்களை கோவை மாநகருக்குள் இயக்க அனுமதியில்லை.n அவிநாசி ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் தொட்டிபாளையம் பிரிவில் இருந்து வீரியம்பாளையம், கைகோலாபாளையம் வழியாக சத்தி ரோடு செல்ல வேண்டும்.n அவிநாசி ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் கோல்டுவின்ஸ் சந்திப்பு, ஹவுசிங் யூனிட், காளப்பட்டி ரோட்டை அடைந்து, சரவணம்பட்டி வழியாக சத்தி ரோடு செல்ல வேண்டும்.n அவிநாசி ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள், எஸ்.என்.ஆர்., சந்திப்பில் வலதுபுறம் திரும்பி நவஇந்தியா ரோடு, ராமகிருஷ்ணா கல்லூரி, நூறடி ரோடு மேம்பாலம் வழியாக மேட்டுப்பாளையம் ரோடு செல்ல வேண்டும்.n திருச்சி ரோட்டிலிருந்து வரும் பஸ்கள் சுங்கம் வழியாக கிளாசிக் டவர் சந்திப்பு, அரசு மருத்துவமனை, லங்காகார்னர், கூட்செட் ரோடு, பழைய மேம்பாலம், நஞ்சப்பா ரோடு வழியாக காந்திபுரம் பஸ் ஸ்டாண்டு செல்ல வேண்டும். n பழைய மேம்பாலம் வழியாக, அவிநாசி ரோட்டில் வரும் வாகனங்கள் ஜே.எம்.பேக்கரி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, செஞ்சிலுவை சங்கம், ரயில்நிலையம் வழியாக திருச்சி ரோட்டுக்கு செல்ல வேண்டும்.n அவிநாசி ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள், விருந்தினர் மாளிகை வழியாக சுங்கம் மற்றும் திருச்சி ரோடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுங்கம் மற்றும் புலியகுளம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், விருந்தினர் மாளிகை வழியாக செல்ல அனுமதியில்லை. n மாற்று வழியாக அவிநாசி ரோட்டுக்கு செல்ல, டி.ஐ.ஜி., அலுவலகம் வந்து ரெட்பீல்டு வழியாக புலியகுளம் சென்று, இடதுபுறம் திரும்பி கிட்னி சென்டர் வழியாக அவினாசி ரோட்டை அடையலாம்.n எல்.ஐ.சி., ரோட்டில் வாகனங்கள் செல்லக்கூடாது. மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து சேலம், திருப்பூர், அவிநாசி, பல்லடம் செல்லக்கூடிய வாகனங்கள் காந்திபுரம் சந்திப்பு, ஆர்.வி.ரவுண்டானா, மகளிர் தொழில் நுட்பக் கல்லூரி, மணீஸ் பள்ளி சந்திப்பு வழியாக லட்சுமி மில்ஸ் சந்திப்பில், அவிநாசி ரோட்டை அடைந்து மேற்குறிப்பிட்டபகுதிகளுக்கு செல்ல வேண்டும். n அவிநாசி ரோடு வழியாக, மத்திய பஸ் ஸ்டாண்டு வர வேண்டிய பஸ்கள் மற்றும் வாகனங்கள் குப்புசாமி நாயுடு மருத்துவமனை சந்திப்பு, அண்ணா சிலை, எல்.ஐ.சி., வழியாக செல்லாமல், லட்சுமி மில் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, காந்திபுரம் மத்திய பஸ் ஸ்டாண்டு செல்ல வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X