பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் நிகழ்ச்சிக்காக கல்வி நிறுவன வாகனங்கள் ஏற்பாடு: நகரம் இன்று நெரிசலால் திணறும்

Added : நவ 21, 2021
Share
Advertisement
போத்தனூர்;கோவையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்போரை, அழைத்து வர தனியார் கல்வி நிறுவனங்களிடமிருந்து பஸ்கள் பெறப்பட்டுள்ளன.முதல்வர் ஸ்டாலின் வ.உ.சி., மைதானத்தில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பயனாளிகள், கட்சியினர் என ஒரு லட்சம் பேரை அழைத்து வர, தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்கள் பெறப்பட்டுள்ளன.நேற்று

போத்தனூர்;கோவையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்போரை, அழைத்து வர தனியார் கல்வி நிறுவனங்களிடமிருந்து பஸ்கள் பெறப்பட்டுள்ளன.முதல்வர் ஸ்டாலின் வ.உ.சி., மைதானத்தில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பயனாளிகள், கட்சியினர் என ஒரு லட்சம் பேரை அழைத்து வர, தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்கள் பெறப்பட்டுள்ளன.நேற்று மாலை, 6:00 மணிக்கு, கல்வி நிறுவனத்தார் பஸ்களை வட்டார போக்குவரத்து அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்தந்த பகுதி தாசில்தார்களிடம் கொண்டு சேர்த்தனர்.இன்று திங்கட்கிழமை என்பதால், பள்ளி, கல்லூரிகள் செயல்படும். மாணவர்களை அழைத்து வர வேண்டிய கட்டாயத்தில், கல்வி நிறுவன நிர்வாகத்தினர் உள்ளனர்.ஆனால் முதல்வரின் நிகழ்ச்சிக்கு வாகனம் அனுப்பாவிடில், போக்குவரத்து துறையினரின் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் எனும் அச்சமும் அவர்களிடம் காணப்படுகிறது.மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு பள்ளி, கல்லூரியும் தலா ஒரு பஸ் வீதம் அனுப்பினாலே, பஸ்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும்.இவை மாநகரை நோக்கி, காலை, 6:00 மணிக்கே ஒவ்வொரு பகுதியிலிருந்தும் கிளம்ப துவங்கிவிடும். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X