சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெள்ளத்தில் சிக்கிய பஸ் 1 கி.மீ., தள்ளிய பயணியர்

Added : நவ 21, 2021
Share
Advertisement
வேலுார்-வேலுார் அருகே, வெள்ள நீரில் சிக்கிய அரசு பஸ்சை, பயணியர் 1 கி.மீ., தள்ளி சென்றனர்.வேலுார் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், காட்பாடி அருகே சேர்க்காடு பெரிய ஏரி நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு நிரம்பி, சின்ன ஏரிக்கு நீர் சென்று கொண்டிருந்தது. வழியில் இருந்த கண்டிப்பேடு தரைப்பாலம் நேற்று அதிகாலை 2:00 மணிக்கு நீரில் மூழ்கியது.இந்நிலையில், காலை 5:00 மணிக்கு
 வெள்ளத்தில் சிக்கிய பஸ் 1 கி.மீ., தள்ளிய பயணியர்

வேலுார்-வேலுார் அருகே, வெள்ள நீரில் சிக்கிய அரசு பஸ்சை, பயணியர் 1 கி.மீ., தள்ளி சென்றனர்.வேலுார் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், காட்பாடி அருகே சேர்க்காடு பெரிய ஏரி நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு நிரம்பி, சின்ன ஏரிக்கு நீர் சென்று கொண்டிருந்தது. வழியில் இருந்த கண்டிப்பேடு தரைப்பாலம் நேற்று அதிகாலை 2:00 மணிக்கு நீரில் மூழ்கியது.

இந்நிலையில், காலை 5:00 மணிக்கு காட்பாடியில் இருந்து சேர்க்காட்டிற்கு அரசு டவுன் பஸ் சென்றது. இதில், 40 பேர் பயணம் செய்தனர். சிவநேசன், 45, ஓட்டினார்.கண்டக்டராக நமச்சிவாயம், 51, இருந்தார். தரைப் பாலத்திற்கு பஸ் வந்த போது, எப்படியாவது வெள்ள நீரை கடந்து சென்று விடலாம் என நினைத்து சென்ற போது, நடுவழியில் நின்று விட்டது. பஸ்சில் இருந்த 10 பேர் நீரில் குதித்து தப்பினர்.நிமிடத்திற்கு நிமிடம் நீர் அதிகம் வந்து கொண்டிருந்ததால்,

பெண்களை மட்டும் பஸ்சில் உட்கார சொல்லி, மற்ற பயணியர், 1 கி.மீ., துாரத்திற்கு பஸ்சை தள்ளிச் சென்று கரையில் விட்டனர்.'மழை, வெள்ளம் போன்ற காலங்களில் இதுபோன்ற ரிஸ்க்கை டிரைவர், கண்டக்டர்கள் எடுக்கக் கூடாது' என பயணியர்தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X