பொது செய்தி

தமிழ்நாடு

கிறிஸ்து அரசர் ஆலயத்தில் தேர் பவனி கோலாகலம்

Added : நவ 21, 2021
Share
Advertisement
கோவை:கிறிஸ்து அரசர் பெருவிழாவை முன்னிட்டு காட்டூர் கிறிஸ்து அரசர் ஆலயத்தில், நேற்று இரவு தேர்பவனி நடந்தது.ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்து அரசர் பெருவிழா காந்திபுரம், காட்டூர் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர் திருவிழா, கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று காலை, கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்வினாஸ் தலைமையில் திருப்பலி
 கிறிஸ்து அரசர் ஆலயத்தில் தேர் பவனி கோலாகலம்

கோவை:கிறிஸ்து அரசர் பெருவிழாவை முன்னிட்டு காட்டூர் கிறிஸ்து அரசர் ஆலயத்தில், நேற்று இரவு தேர்பவனி நடந்தது.ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்து அரசர் பெருவிழா காந்திபுரம், காட்டூர் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர் திருவிழா, கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று காலை, கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்வினாஸ் தலைமையில் திருப்பலி நடந்தது. 32 சிறுவர், சிறுமியருக்கு புதுநன்மை மற்றும் உறுதிப்பூசுதல் வழங்கப்பட்டது. காலை திருப்பலியில், 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து நேற்று மாலை ஆலயத்தில் திருப்பலி நடந்தது. அதன்பின் வளாகத்திற்குள், மலர்கள் மற்றும் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், கிறிஸ்து அரசரின் தேர்பவனி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X