பொது செய்தி

தமிழ்நாடு

'இல்லம் தேடி கல்வி' திட்டம்: வீதி நாடகத்தால் விழிப்புணர்வு

Added : நவ 21, 2021
Share
Advertisement
கோவை:'இல்லம் தேடி கல்வி' திட்டத்திற்கு, வீதி நாடக கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளித்து, குடியிருப்பு பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.கொரோனா தொற்று காரணமாக, ஒன்றரை ஆண்டுகள் பள்ளிகள் திறக்காததால், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த, இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.இத்திட்டம், 12 மாவட்டங்களில், மட்டுமே

கோவை:'இல்லம் தேடி கல்வி' திட்டத்திற்கு, வீதி நாடக கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளித்து, குடியிருப்பு பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.கொரோனா தொற்று காரணமாக, ஒன்றரை ஆண்டுகள் பள்ளிகள் திறக்காததால், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த, இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.இத்திட்டம், 12 மாவட்டங்களில், மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில், கோவை மாவட்டத்திலும், செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர்.திட்டத்தின் நோக்கம், மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி விபரங்கள் குறித்து, வீதி நாடக கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதற்கு, மூன்று நாட்கள், ஒன்பது குழுக்களை சேர்ந்த 81 கலைஞர்களுக்கு நேற்று வரை பயிற்சி அளிக்கப்பட்டது. விரைவில், 600 பள்ளிகள் மற்றும் 600 குடியிருப்புகளுக்கு, இக்கலைஞர்கள் நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறுகையில், ''இல்லம் தேடி கல்வி திட்டத்தின் நோக்கம் குறித்து, ஒயிலாட்டம், தப்பாட்டம் போன்ற, 9 வகை நாடக குழுக்களில் இருந்து, கலைஞர்கள் விரைவில், விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளனர். தன்னார்வலர்களை அதிகளவில் முன்பதிவு செய்ய வைப்பதும், இதன் ஒருபகுதியாகும். ஒரு மாத கால அளவில், விழிப்புணர்வு பணிகள் தொடரும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X