சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அதிவேக வாகனத்தில் சிக்கிய சிறுத்தை பலி

Added : நவ 21, 2021
Share
Advertisement
சத்தியமங்கலம்-ஆசனுார் வனப் பகுதியில், வாகனம் மோதியதில் பெண் சிறுத்தை பலியானது.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதி, சத்தி - மைசூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது. இதனால் சாலையை கடந்து சிறுத்தை, புலி, யானை உள்ளிட்ட விலங்குகள் செல்வது வாடிக்கை. ஆசனுார் வனக் கோட்டம், பிணக்கஹள்ளி காவல் சுற்று அருகே, அடர்ந்த வனப்பகுதி சாலையில், ஒரு சிறுத்தை நேற்று
 அதிவேக வாகனத்தில் சிக்கிய சிறுத்தை பலி

சத்தியமங்கலம்-ஆசனுார் வனப் பகுதியில், வாகனம் மோதியதில் பெண் சிறுத்தை பலியானது.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதி, சத்தி - மைசூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது. இதனால் சாலையை கடந்து சிறுத்தை, புலி, யானை உள்ளிட்ட விலங்குகள் செல்வது வாடிக்கை. ஆசனுார் வனக் கோட்டம், பிணக்கஹள்ளி காவல் சுற்று அருகே, அடர்ந்த வனப்பகுதி சாலையில், ஒரு சிறுத்தை நேற்று இறந்து கிடந்தது. வாகன ஓட்டிகள் தகவலின் அடிப்படையில், ஆசனுார் வனத் துறையினர் உடலை மீட்டனர். 2 வயதான பெண் சிறுத்தை என்பதும், வாகனம் மோதியதில் பலியானதும் தெரிந்தது.வனப் பகுதி சோதனைச் சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை கொண்டு, சிறுத்தை பலிக்கு காரணமான வாகனத்தை தேடும் பணி நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X