அரசியல் செய்தி

தமிழ்நாடு

இன்று கோவை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

Added : நவ 21, 2021
Share
Advertisement
சென்னை-கோவை மற்றும் திருப்பூரில் இன்று நடக்கும் அரசு விழாக்களில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக இன்று கோவை செல்கிறார். தனி விமானத்தில் சென்னையில் இருந்து கோவை செல்லும் அவர், வ.உ.சி., மைதானத்தில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, பல்வேறு துறைகளின் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில்

சென்னை-கோவை மற்றும் திருப்பூரில் இன்று நடக்கும் அரசு விழாக்களில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக இன்று கோவை செல்கிறார். தனி விமானத்தில் சென்னையில் இருந்து கோவை செல்லும் அவர், வ.உ.சி., மைதானத்தில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, பல்வேறு துறைகளின் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். கோவை அரசு விருந்தினர் மாளிகையில் மதிய உணவு மற்றும் சிறிது ஓய்வுக்கு பின், காரில் திருப்பூர் செல்கிறார். அங்கு மாலை 4.00 மணிக்கு சிக்கண்ணா கலை கல்லுாரி வளாகத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.

விழா முடிந்து, இரவு கோவை வந்து அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாளை கொடிசியாவில் நடக்கும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று பேசுகிறார்.முதல்வர் வருகையை முன்னிட்டு, போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக கோவை மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ட்ரோன் கேமரா சாதனங்கள் பறக்க, இரண்டு நாட்கள் போலீசார் தடை விதித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X