சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

கிண்டலடிக்கலாமா?

Updated : நவ 23, 2021 | Added : நவ 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
'நல்ல முயற்சி தான்; இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் இன்னும் இருக்கின்றனரா...' என, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ., முராரி லால் மீனா பற்றி ஆச்சரியத்துடன் பேசுகின்றனர், அங்குள்ள மக்கள். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள டவுசா தொகுதியின் எம்.எல்.ஏ., தான் முராரி லால் மீனா; சேவை மனப்பான்மை உடையவர். சில மாதங்களுக்கு முன் இவர்
அக்கம் பக்கம்


'நல்ல முயற்சி தான்; இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் இன்னும் இருக்கின்றனரா...' என, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ., முராரி லால் மீனா பற்றி ஆச்சரியத்துடன் பேசுகின்றனர், அங்குள்ள மக்கள்.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள டவுசா தொகுதியின் எம்.எல்.ஏ., தான் முராரி லால் மீனா; சேவை மனப்பான்மை உடையவர். சி

ல மாதங்களுக்கு முன் இவர் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். 'என் தொகுதியில் வசிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஒரு போட்டி வைக்கிறேன். 'பொதுத் தேர்வில் முதல் 15 இடங்களை பிடிப்பவர்களை இலவசமாக விமானத்தில் அழைத்துச் செல்வேன்' என்றார்.

தேர்வு முடிந்ததும், அறிவித்தபடியே 15 மாணவர்களை ஜெய்ப்பூரில் இருந்து உதய்பூருக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார். முராரி லால் மீனாவும் அவர்களுடன் சென்றார். 'இந்தாண்டு மட்டுமல்ல ஒவ்வோர் ஆண்டும் இதே போல், 15 மாணவர்களை விமானத்தில் அழைத்துச் செல்வேன். மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என ஊக்கப்படுத்துவதற்காகவே, இதை செய்கிறேன்; விளம்பர நோக்கம் அல்ல' என்றும் கூறினார் முராரி லால் மீனா.

'விளம்பர நோக்கம் இல்லை என்றால், மாணவர்களை விமானத்தில் அழைத்துச் சென்றதை ஏன், ஊடகங்களில் விளம்பரப் படுத்துகிறார். தேவையில்லாத இந்த 'பில்டப்' எதற்கு' என கிண்டலடிக்கின்றனர், எதிர்க்கட்சியினர். முராரி லால் மீனாவோ, 'நல்ல காரியம் செய்தாலும் இப்படி கிண்டலடிக்கின்றனரே...' என, புலம்புகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
22-நவ-202119:31:37 IST Report Abuse
r.sundaram வெறுமனே விமானத்தில் அழைத்து செல்வதற்கு பதில், அந்த மாணவர்களுக்கு மேல் படிப்புக்கு உதவலாமே. செலவழிக்கும் பணம் வீண் செலவாக இல்லாமல் உருப்படியாக இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X