பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை, ராமேஸ்வரம் அனைத்து ரயிலும் இயக்க நடவடிக்கை

Added : நவ 22, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் : கொரோனாவால் நிறுத்தப்பட்ட மதுரை, ராமேஸ்வரம் அனைத்து பயணிகள் ரயிலும் விரைவில் இயக்கப்படும் என மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பி.ஆனந்த் தெரிவித்தார். ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் வந்த மதுரை கோட்ட மேலாளர், அங்கு பயணிகளுக்கான கழிப்பறை கட்டடம், பயணிகள் ஓய்வறை கட்டுமான பணி, ரயில் இன்ஜின் பராமரிப்பு பகுதியை ஆய்வு செய்தார். பின் மாந்தோப்பு தெருவில் ரயில்வேக்கு

ராமேஸ்வரம் : கொரோனாவால் நிறுத்தப்பட்ட மதுரை, ராமேஸ்வரம் அனைத்து பயணிகள் ரயிலும் விரைவில் இயக்கப்படும் என மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பி.ஆனந்த் தெரிவித்தார்.

ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் வந்த மதுரை கோட்ட மேலாளர், அங்கு பயணிகளுக்கான கழிப்பறை கட்டடம், பயணிகள் ஓய்வறை கட்டுமான பணி, ரயில் இன்ஜின் பராமரிப்பு பகுதியை ஆய்வு செய்தார். பின் மாந்தோப்பு தெருவில் ரயில்வேக்கு சொந்தமான பகுதியில் மக்கள் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி உள்ள பகுதியை பார்வையிட்டு, அதனை அகற்றி தரும்படி ராமேஸ்வரம் தாசில்தாரிடம் வலியுறுத்தினார்.

கோட்ட மேலாளர் பி. ஆனந்த் கூறியதாவது:கொரோனா ஊரடங்குகாலத்தில் மதுரை, ராமேஸ்வரம் இடையே நிறுத்தப்பட்ட பகல், மாலை நேர பயணிகள் ரயில் போக்குவரத்து அட்டவணையை ஆய்வு செய்து மீண்டும் இயக்கிடநடவடிக்கை எடுக்கப்படும். ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X