தமிழ்நாடு

தரைப் பாலத்தை சீரமைக்க கோரிக்கை; தடுப்புகள் இன்றி பொதுமக்கள் அச்சத்துடன் பயணம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
பரமக்குடி : ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு பரமக்குடிவைகை ஆறு வழியாக உபரி நீர் செல்கிறது. நவம்பரில் தொடங்கி பருவ மழை பெய்து வரும் நிலையில், வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. நவம்பர் 19 முதல் உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டது. தொடர்ந்து மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டத்திற்கு உபரிநீர் சென்றது. தற்போது ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனுார் மதகுகள் வழியாக வலது,

பரமக்குடி : ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு பரமக்குடிவைகை ஆறு வழியாக உபரி நீர் செல்கிறது. நவம்பரில் தொடங்கி பருவ மழை பெய்து வரும் நிலையில், வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. நவம்பர் 19 முதல் உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டது.

தொடர்ந்து மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டத்திற்கு உபரிநீர் சென்றது. தற்போது ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனுார் மதகுகள் வழியாக வலது, இடது பிரதான கால்வாயில் தண்ணீர் செல்கிறது. நேற்று முன்தினம் தொடங்கி பரமக்குடி வைகை ஆறு வழியாக, ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு தண்ணீர் பாய்கிறது.விவசாயிகள் போதிய மழையின்றி உள்ள மாவட்டத்தில் நிலத்தடிநீர்மட்டம் உயரும் என்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பரமக்குடி, எமனேஸ்வரம் தரைப் பாலத்தை தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், தடுப்புகள் இன்றி பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். மேலும் பாலம் பலமிழந்து மழை நேரங்களில் ஒட்டுமொத்த நீரும் பாலத்தில் தேங்கி நிற்கிறது.தற்போது வைகை நீரை பார்வையிட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிற்பதால் அப்பகுதியில் விபத்து அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆகவே இத்தரைப் பாலத்தை சீரமைக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X