உலகப் பாரம்பரிய வாரம்... பாரம்பரியச் சின்னங்களை போற்றி பாதுகாப்போம்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உலகப் பாரம்பரிய வாரம்... பாரம்பரியச் சின்னங்களை போற்றி பாதுகாப்போம்!

Added : நவ 22, 2021
Share
ராமநாதபுரம் :நம் முன்னோர்களின் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறையினர் அறிந்து பயன்படுத்தவும், பாரம்பரியச் சின்னங்களை போற்றி பாதுகாக்கும் மனப்பான்மையை உருவாக்கவும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 முதல் 25 வரை உலகப்பாரம்பரிய வாரம் கொண்டாடப்படுகிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க உத்தரகோசமங்கை சிவன் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, பர்வதமர்த்தினியம்மன்
 உலகப் பாரம்பரிய வாரம்... பாரம்பரியச் சின்னங்களை போற்றி பாதுகாப்போம்!

ராமநாதபுரம் :நம் முன்னோர்களின் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறையினர் அறிந்து பயன்படுத்தவும், பாரம்பரியச் சின்னங்களை போற்றி பாதுகாக்கும் மனப்பான்மையை உருவாக்கவும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 முதல் 25 வரை உலகப்பாரம்பரிய வாரம் கொண்டாடப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க உத்தரகோசமங்கை சிவன் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, பர்வதமர்த்தினியம்மன் கோயில், திருப்புல்லாணி ஆதிஜெகநாதர், தேவிப்பட்டினம் நவபாஷாணம் என பல பாரம்பரிய வரலாற்று சிறப்புள்ள கோயில்கள் உள்ளன. இவற்றின் கட்டட அமைப்பு முறை, அங்குஉள்ள சிற்பங்கள், ஓவியங்கள் நம் தமிழகத்தின் கட்டடக்கலை, பாரம்பரிய கலாசாரத்திற்கு சான்றாக விளங்குகின்றன.

இத்தகையை சிறப்புமிக்க கோயில்கள் அழிந்துவிடாமல், போற்றி பழமை மாறாமல் பாதுகாத்து, இளைய தலைமுறையினருக்கு இக்கோயில்களின் வரலாறுகளை எடுத்துரைப்பது நமது கடமை ஆகும்.அந்தவகையில், உலகபாரம்பரிய வாரத்தில், ராமநாதபுரத்தை சுற்றியுள்ள சில கோயில்களின் வரலாறு, கட்டட வடிவமைப்பு, சிற்பங்கள், அவற்றின் சிறப்பு குறித்து தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது:

எஸ்.பி.பட்டினம்கல்வெட்டுகளில் தசரத ராமீஸ்வரமுடைய நாயனார் கோயில் எனப்படுகிறது. விமானம், இரு தளங்கள் கொண்ட நாகர திராவிட கலப்பு வகை. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், முதலாம்சடையவர்மன் வீரபாண்டியன் கல்வெட்டுகள் உள்ளன. முத்துாற்றுக் கூற்றத்து கீழ்கூற்று சுத்தவல்லியான சுந்தர பாண்டியபுரம் என பாண்டியர் கல்வெட்டுகளிலும், சுந்தரபாண்டியன்பட்டணம் என சேதுபதிகளின் செப்பேடுகளிலும் இவ்வூர் குறிப்பிடப்படுகிறது. கோயிலின் தெற்கே ஒரு மடம் உள்ளது.திருப்பாலைக்குடிமந்திரநாத சுவாமி கோயில் இருதளங்களைக் கொண்டுள்ளது.

விமானத்தின் மேல்பகுதி செங்கற்களாலும், பிற பகுதிகள் மணற்பாறை கற்களாலும் கட்டப்பட்டுள்ளன. தலவிருட்சம் பழமையான வன்னிமரம். கி.பி.1219ல் கல்வெட்டில் இக்கோயில் இறைவன் பெயர் அபிமானராமன் எனப்படுகிறது. கி.பி.1281ம் ஆண்டு முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் கல்வெட்டில் சொல்லப்படும் மருதுார், மானாபரணபட்டினம் இவ்வூரின் வேறு பெயர்களாகலாம். ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய் வெட்டிய மூன்றாம்ராஜசிம்ம பாண்டியனின் மானாபரணன் என்ற பெயர் இவ்வூருக்கு சூட்டப்பட்டுள்ளது.

திருப்புல்லாணிராமர் புல்லைத் தலையணையாகக் கொண்டதால் இவ்வூர் திருப்புல்லணை எனப்பட்டது. திருமங்கையாழ்வார் பாசுரங்களில் புல்லாணி எனவும், கல்வெட்டுகளில் கீழ்ச்செம்பி நாட்டுத் திருப்புல்லாணி எனவும் சொல்லப்படுகிறது. ஆதிஜெகந்நாதராக அமர்ந்த கோலத்திலும், பட்டாபி ராமராக நின்ற கோலத்திலும், தர்ப்பசயன ராமராக கிடந்த கோலத்திலும் திருமால் காட்சியளிக்கிறார். கோபுரத்தில் சேதுபதிகள் மரச்சிற்பங்கள்உள்ளன. மதுரையை டில்லி சுல்தான்களிடம் இருந்து மீட்ட விஜயநகரமன்னர் வீர கம்பண உடையாரின் முதல் கல்வெட்டு இங்கு உள்ளது.

திருவாடானைதிருஞானசம்பந்தர் பாடல்களிலும், கல்வெட்டுகளிலும் இவ்வூர், ஆடானை எனப்படுகிறது. முத்துாற்றுக்கூற்றம் எனும் நாட்டுப் பிரிவில் இருந்துஉள்ளது. தலவிருட்சம் வில்வமரம். நிலம் மற்றும் நெல் தானமாக வழங்கப்பட்டதை பாண்டியர் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. வரி கொடுக்காமல் இருக்க கைக்கூலி வாங்குபவர்களைக் கடுமையாகச்சாடுகிறது

தளவாய் சேதுபதியின் கல்வெட்டு.தேவிபட்டினம் திலகேஸ்வரர் கோயில் கல்வெட்டுகளில் இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் சிரிளங்கோமங்கலமான உலகமாதேவிப்பட்டினம் எனவும், முதலாம் சடையவர்மன் சீவிக்கிரமபாண்டியன் காலத்தில் சிறுகடற்கரைச் சேதுமூலம் போக்கீஸ்வரம் எனவும், முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில் போக்கீஸ்வரம் எனவும் சுந்தரபாண்டியன் பெயரிலும் அழைக்கப்பட்டுஉள்ளது.

இவ்வூரும் அருகில் இருந்த புறக்குடியாகிய சீவல்லவபட்டினமும் அருகருகே அமைந்த இருவேறு பட்டினங்கள் ஆகும்.தொண்டிசிதம்பரேஸ்வரர் சிவன் கோயிலும், உந்திபூத்த பெருமாள் திருமால் கோயிலும் உள்ளன. நம்புதாளை சிவன் கோயிலும் தொண்டியில் உள்ளதாக கல்வெட்டு தெரிவிக்கிறது. கல்வெட்டில் தொண்டியான பவித்ரமாணிக்கப்பட்டினம் என குறிப்பிடப்படுகிறது.

கல்வெட்டில், உந்திபூத்தபெருமாள் கோயில் திருமேற்கோயில் எனவும்,இறைவன் புரவுவரி விண்ணகர பெருயான் எனவும், நம்புதாளை இறைவன் குலசேகர பாண்டீஸ்வரமுடையார் எனவும் அழைக்கப்படுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X