பொது செய்தி

தமிழ்நாடு

புதிய வீடுகள் தேவைப்படுவோர்: வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் அழைப்பு

Added : நவ 22, 2021
Share
Advertisement
கோவை:சிங்காநல்லுார் அடுக்குமாடி குடியிருப்புக்கு, தவணையை முறையாக செலுத்திய ஒதுக்கீடுதாரர்கள், அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து, புதிதாக கட்டப்படவுள்ள வீடுகள் திட்டத்தில் தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய கோவை மண்டல செயற்பொறியாளர் எட்வின் சுந்தர்சிங் வெளியிட்ட அறிவிப்பு:சிங்காநல்லுாரில் உள்ள, 960 அடுக்குமாடி

கோவை:சிங்காநல்லுார் அடுக்குமாடி குடியிருப்புக்கு, தவணையை முறையாக செலுத்திய ஒதுக்கீடுதாரர்கள், அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து, புதிதாக கட்டப்படவுள்ள வீடுகள் திட்டத்தில் தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய கோவை மண்டல செயற்பொறியாளர் எட்வின் சுந்தர்சிங் வெளியிட்ட அறிவிப்பு:சிங்காநல்லுாரில் உள்ள, 960 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு தாரர்களில், 127 பேர் நிலுவைத்தொகையை செலுத்தாத காரணத்தால், அவர்களது ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.ஆனால் ஒதுக்கீடுதாரர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, அவர்கள் கொடுத்த ஆவணங்களை சரிபார்த்ததில், தவணை தொகையை முழுமையாக செலுத்தியிருப்பது தெரிந்தது.அதன் அடிப்படையில் முழுத்தொகையையும் செலுத்திய பட்டியலில், 54 ஒதுக்கீடுதாரர்களின் பெயர்கள் சேர்க்கப்படுகின்றன. 73 பேர் தவணை தொகையை செலுத்தாமல் உள்ளனர்.அவர்களும் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்தோ, கட்டணங்களை செலுத்தியோ தங்களது பெயர்களை பட்டியலில் இடம் பெற செய்து கொள்ளலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.இந்த கணக்கெடுப்பு பணிகள் ஒரு புறம் நடைபெற்று வரும் சூழலில், சிதிலமடைந்த சிங்காநல்லுார் அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்து அப்புறப்படுத்திவிட்டு, புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை அமைப்பதற்கான, வரைபடம் இறுதி செய்தல் உள்ளிட்ட அனைத்துப்பணிகளையும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய கோவை மண்டலம் மேற்கொண்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X