பொது செய்தி

தமிழ்நாடு

நோய் தொற்றுகளால் இப்படியும் பயன்! கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் குறைந்தது

Added : நவ 22, 2021
Share
Advertisement
கோவை:கொரோனா, டெங்கு, ஜிகா, பன்றி காய்ச்சல் போன்ற அடுத்தடுத்து வந்த நோய் தொற்றுகளால் சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரமடைந்து, ரேஷன் அரிசி கடத்தல் குறைந்துள்ளது.கோவை-கேரளா இடையே மாவட்டத்தில் மொத்தம், 13 சோதனை சாவடிகள் உள்ளன. கோவை மாவட்டம் கேரளா மாநிலத்தின் எல்லையாக இருப்பதால், கோவையில் இருந்து ரேஷன் அரிசி கடத்துவது பல ஆண்டுகளாக தொடர் கதையாக உள்ளது.கடத்தலை

கோவை:கொரோனா, டெங்கு, ஜிகா, பன்றி காய்ச்சல் போன்ற அடுத்தடுத்து வந்த நோய் தொற்றுகளால் சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரமடைந்து, ரேஷன் அரிசி கடத்தல் குறைந்துள்ளது.கோவை-கேரளா இடையே மாவட்டத்தில் மொத்தம், 13 சோதனை சாவடிகள் உள்ளன. கோவை மாவட்டம் கேரளா மாநிலத்தின் எல்லையாக இருப்பதால், கோவையில் இருந்து ரேஷன் அரிசி கடத்துவது பல ஆண்டுகளாக தொடர் கதையாக உள்ளது.
கடத்தலை கட்டுப்படுத்த, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், மாவட்ட நிர்வாகம் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இருந்தும் பல்வேறு வழிகளில், கடத்தல் தொடர் கதையாகவே இருந்து வந்தது.இச்சூழலில் பல்வேறு தடுப்பு பணிகள், ரோந்து பணிகள் மேற்கொண்டும் தடுக்க முடியாத அரிசி கடத்தலை கொரோனா, ஜிகா போன்ற தொற்று நோய்கள் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
இது குறித்து, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், 'கோவை-கேரளா எல்லைகளில் கொரோனா, ஜிகா, டெங்கு வைரஸ் நோய் தொற்றுகள் தொடர்பாக கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது. 13 சோதனை சாவடிகள் வழியாக ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வந்தது.நோய் தொற்றை கட்டுப்படுத்த, அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், கடந்த சில மாதங்களாக ரேஷன் அரிசி கடத்தல், 80 சதவீதம் குறைந்துள்ளது. ஒரு சிலர் இருசக்கர வாகனங்களில் கடத்துவதாக தகவல் உள்ளது. இதனை உடனுக்குடன் கண்டறிந்து, ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வருகிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X