விமான நிலைய வளாகத்தில் 'லொள்' தொல்லை தாங்கலை!

Added : நவ 22, 2021
Share
Advertisement
கோவை:கோவை விமானநிலைய வளாகத்தில், நாய்கள் சுற்றித்திரிவது பயணிகளுக்கு தொல்லையாக மாறியுள்ளது.கோவை சர்வதேச விமான நிலையத்தின் முன்பகுதியில், வாகனங்கள் நிறுத்த வசதிகள் உள்ளன. திறந்தவெளியாக உள்ள இந்த பகுதியில், எளிதாக நாய்கள் உள்ளே நுழைந்து விடுகின்றன. இது பயணிகளுக்கு அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது.வளாகத்தில் நாய்களின் குரைப்பு சப்தம், பயணிகளுக்கு தொல்லையாக

கோவை:கோவை விமானநிலைய வளாகத்தில், நாய்கள் சுற்றித்திரிவது பயணிகளுக்கு தொல்லையாக மாறியுள்ளது.கோவை சர்வதேச விமான நிலையத்தின் முன்பகுதியில், வாகனங்கள் நிறுத்த வசதிகள் உள்ளன. திறந்தவெளியாக உள்ள இந்த பகுதியில், எளிதாக நாய்கள் உள்ளே நுழைந்து விடுகின்றன. இது பயணிகளுக்கு அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது.வளாகத்தில் நாய்களின் குரைப்பு சப்தம், பயணிகளுக்கு தொல்லையாக அமைந்துள்ளது. விமான நிலைய பணியாளர்கள், பணியில் இருந்தாலும், நாய்களை விரட்டுவதில்லை.எளிதாக விமான நிலைய வளாகத்தில் புகுந்து, அங்கு உலா வருகின்றன. விமான நிலையத்தை ஒட்டிய வெளிப்புற பகுதியில், குடியிருப்பு பகுதியிலிருந்து வரும் குப்பை கொட்டப்படுகிறது.இவற்றால் விமான நிலையத்தின் சுற்றுப்பகுதியும் அசுத்தமடைந்துள்ளது. இவற்றை உண்ண வரும் பறவைகளால் விமானங்களுக்கும், நாய் தொல்லையால் பயணிகளுக்கும் தொந்தரவு உள்ளதால், வெகுவிரைவில் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X