பொது செய்தி

தமிழ்நாடு

நீர்வரத்து கால்வாயை சீரமைத்த விவசாயிகள்

Added : நவ 22, 2021
Share
Advertisement
திருப்பரங்குன்றம் : மதுரை ஹார்விபட்டி சூறாவளிமேடு கண்மாய் வரத்து கால்வாயை இந்தாண்டும் விவசாயிகள் சீரமைத்து தண்ணீர் செல்ல வழிவகை செய்தனர்.இக்கண்மாய் 40 ஆண்டுகளுக்குப்பின் துார்வாரப்பட்டு கடந்தாண்டு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. இந்தாண்டும் நீர்வரத்து கால்வாயை சூறாவளிமேடு கண்மாய் பாசன ஆயக்கட்டுதாரர்கள், மீன்பிடி தொழிலாளர் நலச்சங்க நிர்வாகிகள்

திருப்பரங்குன்றம் : மதுரை ஹார்விபட்டி சூறாவளிமேடு கண்மாய் வரத்து கால்வாயை இந்தாண்டும் விவசாயிகள் சீரமைத்து தண்ணீர் செல்ல வழிவகை செய்தனர்.

இக்கண்மாய் 40 ஆண்டுகளுக்குப்பின் துார்வாரப்பட்டு கடந்தாண்டு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. இந்தாண்டும் நீர்வரத்து கால்வாயை சூறாவளிமேடு கண்மாய் பாசன ஆயக்கட்டுதாரர்கள், மீன்பிடி தொழிலாளர் நலச்சங்க நிர்வாகிகள் துார்வாரினர்.

சங்க நிர்வாகிகள் சபதம், ஆண்டி ரமேஷ், படேல், ராஜேந்திரன் கூறியதாவது: இக்கண்மாய்க்கு நிலையூர் கால்வாய் மூலம் நீர் வரும். நிலையூர் கால்வாயிலிருந்து கண்மாய்க்கு தண்ணீர் வரும் கால்வாயில் செடி, கொடிகள் நிரம்பி குப்பைகள் மண்டியிருந்தன. அவற்றை சுத்தம் செய்தோம். கண்மாய்க்கு தண்ணீர் செல்வதால் விவசாயத்திற்கு பயன்படும். நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X