மழைநீர் அகற்றப்படுமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மழைநீர் அகற்றப்படுமா?

Added : நவ 22, 2021
Share
திருப்பூர் மாநகராட்சி ஆணையருக்கு மா.கம்யூ., வடக்கு ஒன்றிய குழு உறுப்பினர் சிகாமணி, அனுப்பிய மனு:மாநகரா ட்சி 18வது வார்டு, வாவிபாளையம், பாரிவள்ளல் நகர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பாறைக்குழியில் மழைநீர் நிரம்பி வழிகிறது. கன மழையால் நிரம்பிய பாறைக்குழி தண்ணீர் திருப்பூர் - பூலுவபட்டி பிரதான சாலையில் குளம்போல் தேங்கி உள்ளது. போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

திருப்பூர் மாநகராட்சி ஆணையருக்கு மா.கம்யூ., வடக்கு ஒன்றிய குழு உறுப்பினர் சிகாமணி, அனுப்பிய மனு:மாநகரா ட்சி 18வது வார்டு, வாவிபாளையம், பாரிவள்ளல் நகர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பாறைக்குழியில் மழைநீர் நிரம்பி வழிகிறது.
கன மழையால் நிரம்பிய பாறைக்குழி தண்ணீர் திருப்பூர் - பூலுவபட்டி பிரதான சாலையில் குளம்போல் தேங்கி உள்ளது. போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. மழை நீரில் சாக்கடை நீர் கலந்து சாலைகளில் தேங்குவதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. சாலையில் தேங்கும் நீரை அகற்ற வேண்டும்.வாவிபாளையம், பாரி வள்ளல் நகர், 2வது வீதியில் 'அம்ரூத்' திட்டத்துக்காக தோண்டப்பட்ட குழியில் 'வால்வு' அமைக்கப்பட்ட இடம் மேடாக உள்ளதால் அந்த வீதியில் மழை நீர் வெளியேறாமல் தேங்கியுள்ளது. அதை சீர் செய்ய வேண்டும். வாவிபாளையம் நகர்ப்புற துணை சுகாதார நிலையம் முன்பு மழைநீர் தேங்குகிறது. பள்ளமாக உள்ள பகுதியை மண் போட்டு சமப்படுத்த வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X