பொது செய்தி

தமிழ்நாடு

புராணங்கள் பேசும் மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்கள்

Added : நவ 22, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை தொல்லியல் ஆய்வு சங்கம், பாண்டியர்கள் தேடி பயண குழு சார்பில் உலக மரபு வாரத்தை (நவ., 19 - நவ., 25) முன்னிட்டு புராணங்கள் பேசும் மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்கள் குறித்த விளக்க உரை கிழக்கு கோபுரம் முன் நடந்தது.கோயில் கட்டடக்கலை, சிற்பத்துறை ஆய்வாளர் தேவி பேசியதாவது: மீனாட்சி அம்மன் கோயிலில் சுதை சிற்பங்கள் இல்லாமல் பல ஆண்டுகளாக கட்டாமல் இருந்து,சிற்பங்களுடன்

மதுரை : மதுரை தொல்லியல் ஆய்வு சங்கம், பாண்டியர்கள் தேடி பயண குழு சார்பில் உலக மரபு வாரத்தை (நவ., 19 - நவ., 25) முன்னிட்டு புராணங்கள் பேசும் மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்கள் குறித்த விளக்க உரை கிழக்கு கோபுரம் முன் நடந்தது.

கோயில் கட்டடக்கலை, சிற்பத்துறை ஆய்வாளர் தேவி பேசியதாவது: மீனாட்சி அம்மன் கோயிலில் சுதை சிற்பங்கள் இல்லாமல் பல ஆண்டுகளாக கட்டாமல் இருந்து,சிற்பங்களுடன் கட்டப்பட்டதால் வடக்கு கோபுரம் இன்றும் மொட்டை கோபுரம் என்றே அழைக்கப்படுகிறது. 17ம் நுாற்றாண்டில் கிழக்கு கோபுரம் சார்ந்த உரிமை போராட்டம் ஒன்றில் ஒருவர் உயிர் துறந்ததால் இன்றும் அக்கோபுர வாசல் திறக்கப்படுவதில்லை.

இதுகுறித்த தகவல்கள் கோபுர கல்வெட்டில் உள்ளது.நான்கு கோபுரங்களில் தெற்கு கோபுரம் மிக உயர்ந்த (160 அடி) மற்றும்அதிக சிற்பங்கள் கொண்ட (1511) கோபுரமாக திகழ்கிறது. மேற்கு கோபுரம் வெளிப்புறம், நிலைக்காலில் இரட்டை மீன் சின்னங்களும், பிரம்மா, விஷ்ணு, சிவன் தலை கொண்ட ஏகபாத திரி மூர்த்தி சிற்பமும்உள்ளது என்றார். நிர்வாகிகள் மணிகண்டன், பேச்சிமுத்து ஒருங்கிணைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X