சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

புதுமையான டீ கடை நடத்துறேன்!

Updated : நவ 23, 2021 | Added : நவ 22, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
பெண்கள் நடத்த தயங்கும் டீ கடையை துவக்கி, அதில் புகையிலை பொருட்களை விற்காமல், உடல் நலத்திற்கு உகந்த மூலிகை டீயுடன், முழுவதும் பெண்களையே வேலைக்கு வைத்துள்ளது பற்றி கூறும் காஞ்சிபுரத்தை சேர்ந்த யமுனா:இன்னொருவரிடம் சென்று வேலை செய்வதை விட, நாமே சுயமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு மேலோங்கி இருந்தது.என் மாமனார் காஞ்சி தாலுகா அலுவலக வளாகத்தில் டீ கடை
சொல்கிறார்கள்

பெண்கள் நடத்த தயங்கும் டீ கடையை துவக்கி, அதில் புகையிலை பொருட்களை விற்காமல், உடல் நலத்திற்கு உகந்த மூலிகை டீயுடன், முழுவதும் பெண்களையே வேலைக்கு வைத்துள்ளது பற்றி கூறும் காஞ்சிபுரத்தை சேர்ந்த யமுனா:
இன்னொருவரிடம் சென்று வேலை செய்வதை விட, நாமே சுயமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு மேலோங்கி இருந்தது.என் மாமனார் காஞ்சி தாலுகா அலுவலக வளாகத்தில் டீ கடை வைத்திருந்தார். எங்களுக்கு அந்த கடையை எடுத்து நடத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தது. டீ கடை என்றாலே ஆண்களுக்கானது என்பது போல அதன் சூழ்நிலை உள்ளது. அதை மாற்ற வேண்டும் என நினைத்தேன். ஆண், பெண் பேதமற்று எல்லாரும் வர வேண்டு மானால் பீடி, சிகரெட் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
'இதெல்லாம் ஒத்து வராது. டீ கடை என்பதன் அர்த்தமே இல்லாமல் போகும்' என்றெல்லாம் பயமுறுத்தினர். ஆரம்பத்தில் சில மாதங்கள் பெருத்த நஷ்டத்தையும் சந்தித்தோம். பின், புதிய முறையில் மசாலா டீ, மூலிகை டீ என்று அறிமுகம் செய்தோம். கூட்டம் வரத் துவங்கியது.டீ கடையில் அனுபவமும் வருமானமும் நல்ல முறையில் வரத் துவங்கிய பின், நானே தனியாக ஒரு டீ கடை துவங்கினேன்.என் கணவர் என் எண்ணங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.

'கோபு காபி ஷாப்' என்று என் மாமனார் பெயரிலேயே துவங்கினேன். பெண்கள் தனியே டீ கடைக்கு வரத் தயங்குவதை உணர்ந்து, டீ மாஸ்டர் முதல், வேலைக்கு இருப்போர் அனைவருமே பெண்களையே நியமிக்க முடிவு செய்தேன். எங்கள் கடைக்கு பெண்கள் சகஜமாக வர வேண்டுமென்றால் இது தான் வழி என்று தோன்றியது. என் எண்ணம் வெற்றி அடைந்தது.
கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள் முதல், கல்லுாரிக்குப் போகும் பெண்கள் வரை அனைவரும் கடைக்கு வரத் துவங்கினர். பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் கடை என்று அடையாளம் கிடைத்து விட்டது.பசும்பால் மட்டுமே எங்கள் கடையில் பயன்படுத்துகிறோம். வெல்லம், கருப்பட்டி என்று துவங்கி, சித்த மருத்துவர் அறிவுரைப்படி அதிமதுரம் போன்ற, 13 மூலிகைகளை சரியான அளவில் கலந்து மூலிகைப் பொடி தயார் செய்திருக்கிறோம்.
இது எங்கள் கடையில் மட்டுமே கிடைக்கக்கூடிய சொந்தத் தயாரிப்பு. அதற்காக வாடிக்கையாளர்களும் எங்களை தேடி வருகின்றனர். அதோடு, கைக்குழந்தைகளுக்கு பசும்பால் இலவசமாக வழங்குகிறோம். குடும்பத்தோடு வருவோருக்கும் பெரியோருக்கும் மட்டுமே பணம் வாங்குகிறேன். குழந்தைகளுக்குப் பணம் வாங்குவதில்லை. வீடுகளில் இருந்து இதற்காகவே வந்து பால் வாங்கி போகும் பெண்களும் உண்டு. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இதை சேவையாக செய்து கொண்டிருக்கிறேன்!

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
22-நவ-202117:20:56 IST Report Abuse
DVRR இது ஏற்கனவே வந்திருச்சே
Rate this:
Cancel
KV Pillai - Chennai,இந்தியா
22-நவ-202117:08:32 IST Report Abuse
KV Pillai வாழ்க வளமுடன்
Rate this:
Cancel
Jagannathan Narayanan - tirupur ,இந்தியா
22-நவ-202107:16:09 IST Report Abuse
Jagannathan Narayanan கிரேட்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X