பொது செய்தி

தமிழ்நாடு

ரத்த தானம் வழங்கிய ஸ்ரீசத்ய சாயி பக்தர்கள்

Added : நவ 22, 2021
Share
Advertisement
திருப்பூர்:ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதியில், சுவாமியின், 96வது பிறந்த நாளை முன்னிட்டு, ரத்ததான முகாம் நேற்று நடந்தது.திருப்பூர் மாவட்ட ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதிகள் சார்பில், ஸ்ரீசத்ய சாய்பாபா 96வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.கடந்த, 19ம் தேதி, திருப்பூர் ஸ்ரீசத்ய சாய் கோவிலில், கூட்டு பஜனை, 'காயத்ரி மந்திரத்தின் சிறப்பு' குறித்த சொற்பொழிவு
 ரத்த தானம் வழங்கிய ஸ்ரீசத்ய சாயி பக்தர்கள்

திருப்பூர்:ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதியில், சுவாமியின், 96வது பிறந்த நாளை முன்னிட்டு, ரத்ததான முகாம் நேற்று நடந்தது.திருப்பூர் மாவட்ட ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதிகள் சார்பில், ஸ்ரீசத்ய சாய்பாபா 96வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.கடந்த, 19ம் தேதி, திருப்பூர் ஸ்ரீசத்ய சாய் கோவிலில், கூட்டு பஜனை, 'காயத்ரி மந்திரத்தின் சிறப்பு' குறித்த சொற்பொழிவு நடந்தது.குழந்தைகளுக்கான 'கிளாஸ் பெயின்டிங்', மங்கள ஆரத்தி நடைபெற்றது. நேற்று முன்தினம், காலை, 5:00 மணிக்கு சகஸ்ர நாம பாராயணமும், பஜனையும் நடந்தது. குழந்தைகளுக்கான கலாச்சார நிகழ்ச்சியும், மங்கள ஆரத்தியும் நடந்தன.நேற்று காலை, 10:00 மணிக்கு, ரத்ததான முகாம் துவங்கியது. திருப்பூர் அரசு மருத்துவமனை டாக்டர் குழுவினர், ரத்ததான முகாம் ஏற்பாடுகளை செய்தனர். நேற்று மட் டும் 34 பேர், ரத்ததானம் செய்தனர். இன்று மாலை, 4:00 மணிக்கு, திருப்பூர் சிவ ஷர்மிளா காப்பகத்துக்கு சென்று இளைஞர்கள் சேவையாற்ற உள்ளனர். நாளை (23ம் தேதி), காலை, 5:00 மணிக்கு, ரும்காரம், சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனம், கணபதி ேஹாமம் நடைபெற உள்ளது.காலை, 9:00 மணிக்கு ஸ்ரீசகஸ்ர நாம பாராயணம், பஜனை, நாராயண சேவை, வேத பாராயணம், சாய் நவரத்தின மாலை, பஜனை நடக்கிறது.கோவை சேஷராஜின், 'ஸ்ரீசத்ய சாய் அவதாரம்' என்ற தலைப்பில், ஆன்மிக சொற்பொழிவு நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை, திருப்பூர் சத்ய சாய் சேவா சமிதி நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X