மம்தா இன்று டில்லி பயணம்: பிரதமரை சந்திக்கிறார்

Updated : நவ 22, 2021 | Added : நவ 22, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
கோல்கட்டா-டில்லிக்கு மூன்று நாள் பயணமாக இன்று செல்லும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரத மர் மோடியை சந்தித்து, பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படைக்கு எல்லை அதிகாரம் மாற்றியமைக்கப்பட்டது குறித்து பேச்சு நடத்துகிறார்.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி

கோல்கட்டா-டில்லிக்கு மூன்று நாள் பயணமாக இன்று செல்லும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரத மர் மோடியை சந்தித்து, பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படைக்கு எல்லை அதிகாரம் மாற்றியமைக்கப்பட்டது குறித்து பேச்சு நடத்துகிறார்.latest tamil news


மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்த மம்தா, டில்லிக்கு ஜூலையில் சென்றார். கடும் அதிருப்திஅப்போது பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பலரையும் சந்தித்து பேசினார்.இதன்பின், மம்தா தலைமையில் பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பது பற்றி பேசப்பட்டது; இதை காங்கிரஸ் விரும்பவில்லை.

மேலும் பல மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி, திரிணமுல் காங்கிரசில் இணைந்தனர். இதனால், மம்தா மீது காங்கிரஸ் தலைமை கடும் அதிருப்தியில் உள்ளது.இந்தியா - பாகிஸ்தான், இந்தியா - வங்கதேசம் ஆகிய சர்வதேச எல்லைகள் அடங்கிய மாநிலங்களில், எல்லையிலிருந்து ௫௦ கி.மீ., துாரத்துக்குள் கைது நடவடிக்கை மேற்கொள்ளவும், சோதனை நடத்தவும், பி.எஸ்.எப்.,புக்கு அதிகாரம் வழங்கப்பட்டுஉள்ளது. இதற்கு முன் இந்த அதிகாரம் 15 கி.மீ., வரை மட்டும் வழங்கப்பட்டிருந்தது. இதற்கு மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.


latest tamil news


பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் வரும் 29ல் துவங்குகிறது. இந்நிலையில், மூன்று நாள் பயணமாக டில்லிக்கு மம்தா பானர்ஜி செல்கிறார்.அங்கு பிரதமர் மோடியை சந்தித்து, பி.எஸ்.எப்., எல்லை அதிகார விவகாரம் பற்றி விவாதிக்க மம்தா முடிவு செய்துள்ளார். குளிர்காலக் கூட்டத்தொடரில் என்ன மாதிரியான பிரச்னைகளை முன்வைத்து, மத்திய அரசுக்கு நெருக்கடி அளிக்கலாம் என்பது குறித்து, எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசிக்கவும் மம்தா திட்டமிட்டுஉள்ளார். காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுலை சந்திப்பது பற்றி மம்தாவிடம் எந்த திட்டமும் இல்லை என தெரிய வந்துஉள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R VENKATARAMANAN - Chennai,இந்தியா
22-நவ-202112:28:02 IST Report Abuse
R VENKATARAMANAN since Mamthaa is up to anything, the Prime Minister should be more careful during any discussion. She should be physically checked first before initiating any dialogue. It is advisable to conduct a video conferencing to avoid any untoward incidents.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22-நவ-202104:06:00 IST Report Abuse
J.V. Iyer நாடு பாதுகாப்பை மோடிஜி ஒருபொழுதும் சமரசம் செய்துகொள்ளமாட்டார். பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படைக்கு உள்ள 50 கி.மி. அதிகாரம் 250 கி.மி. யாக அதிகரிக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X