பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி கட்டடம் திறக்க தாமதம்; பின்னணியில் 'அரசியல்'

Added : நவ 22, 2021
Share
Advertisement
அவிநாசி:அவிநாசி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், கட்டி முடிக்கப்பட்ட வகுப்பறை கட்டடத்தை திறப்பதில், அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளதால், மாணவர்கள் அவதியுறுகின்றனர்.அவிநாசி போலீஸ் ஸ்டேஷன் அருகே, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியின் தற்போதைய மாணவர் எண்ணிக்கை, 355 பேர். நான்கு வகுப்பறை கட்டடம் மட்டுமே உள்ள இப்பள்ளியில், ஆண்டுக்காண்டு, மாணவர் எண்ணிக்கை
 பள்ளி கட்டடம் திறக்க தாமதம்; பின்னணியில் 'அரசியல்'

அவிநாசி:அவிநாசி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், கட்டி முடிக்கப்பட்ட வகுப்பறை கட்டடத்தை திறப்பதில், அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளதால், மாணவர்கள் அவதியுறுகின்றனர்.அவிநாசி போலீஸ் ஸ்டேஷன் அருகே, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியின் தற்போதைய மாணவர் எண்ணிக்கை, 355 பேர். நான்கு வகுப்பறை கட்டடம் மட்டுமே உள்ள இப்பள்ளியில், ஆண்டுக்காண்டு, மாணவர் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால், வகுப்பறைக்கு பற்றாக்குறை ஏற்பட்டது.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், எம்.எல்.ஏ. தனபால், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, இரண்டு வகுப்பறை கட்டடம் கட்ட, 16 லட்சம் ரூபாய் ஒதுக்கினார்.அக்கட்டடத்தின் மேல் தளத்தில், கூடுதலாக, 2 வகுப்பறை கட்டடம் கட்ட, ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில் இருந்து, 16 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. மொத்தம், 32 லட்சம் ரூபாய் நிதியில் கட்டட கட்டுமானப்பணி முடிந்து, கடந்த, 18ம் தேதி, எம்.எல்.ஏ., தனபால் முன்னிலையில் திறப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டது; திடீரென, நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.இதேபோன்று, அவிநாசிலிங்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கும். எம்.எல்.ஏ.. தொகுதி நிதியில் இருந்து, 16 லட்சம், ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து, 16 லட்சம் ரூபாய் செலவில், நான்கு வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டு, திறப்புவிழா நடத்த திட்டமிடப்பட்டது; அந்த நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது.தற்போது, ஆளுங்கட்சியாக தி.மு.க., இருப்பதால், உள்ளூர்அமைச்சர் தலைமையில் தான், பள்ளி கட்டடங்களை திறக்க வேண்டும் என, உள்ளூர் தி.மு.க.,வினர் கூறியுதுதான், பள்ளிக்கட்டட திறப்பு விழா, திடீரென ரத்து செய்யப்பட்டது எனக் கூறப்படுகிறது.பள்ளி கட்டட விவகாரத்தில், 'அரசியல்' செய்வதை தவிர்த்து, மாணவர் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X