திருப்பூர்:முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, மூன்றாவது முறையாக, திருப்பூர் மாவட்டத்துக்கு இன்று, முதல்வர் ஸ்டாலின் வருகிறார். கடந்த இரண்டு நிகழ்ச்சிகளின்போதும், ஊரடங்கு அமலில் இருந்ததால், அவர் பங்கேற்ற நிகழ்ச்சி களில், பொதுமக்கள் பங்கேற்கவில்லை. இன்று நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில், பொதுமக்கள் பங்கேற்கின்றனர்.வேளாண்மை, தொழில் ஆகியன மாவட்டத்தின் வளர்ச்சிக்கு இரு கண்களாகத் திகழ்கின்றன. பின்னலாடைத்தொழில், திருப்பூரில் கோலோச்சுகிறது. மாவட்ட வளர்ச்சிக்கான தேவைகளை நிறைவேற்ற, முதல்வர், சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.உழவர் சந்தைக்குஅதிகாரி இல்லைவேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், உழவர் சந்தைகள் நிர்வாகம் செய்யப்படுகின்றன. திருப்பூர் மாவட்டத்துக்கு, வேளாண் விற்பனை பிரிவு துணை இயக்குனர் பணியிடம் தோற்றுவிக்கப்படவில்லை. இதனால், ஈரோடு - கோவை மாவட்ட அதிகாரிகளே, உழவர் சந்தைகளை கவனிக்க வேண்டியுள்ளது.தமிழகத்திலேயே, அதிக காய்கறி விற்பனை நடக்கும் திருப்பூர் உழவர் சந்தைகள், விவசாயிகள், பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில், வேளாண் விற்பனை குழுவில், துணை இயக்குனர் பணியிடத்தை உடனடியாக தோற்றுவிக்க வேண்டும்.தொங்கும் பாலங்கள்பணி முடியுமா?திருப்பூர் மாநகராட்சியில், கடந்த தி.மு.க., ஆட்சியில் துவங்கிய பாலங்கள் இதுவரை நிறைவு பெறாமல் உள்ளன. அணைப்பாளையம் ரயில்வ மற்றும் ஆற்றுப்பாலம், மண்ணரை ரயில்வே பாலம்,எஸ்.ஆர்.சி., மில் பாலம், குமரன் ரோடு சுரங்கபாலம் பணிகள் பாதியில் நிற்கின்றன. பலமுறை திருத்திய மதிப்பீடு தயாரித்தும் பணிகள் முடிந்தபாடில்லை. பாலம் பணிகளை விரைந்து முடிக்க, முதல்வர் நேரடியாக உத்தரவிட வேண்டும்.புதிய பாலங்கள்காலத்தின் கட்டாயம்திருப்பூர், மங்கலம் ரோடு விரிவாக்கம் செய்யப்படாமல் இருக்கிறது. அந்த ரோட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும். பல்லடம் ரோடு, மாநகராட்சி முதல் - மங்கலம் ரோடு, அவிநாசி ரோடு, பி.என்., ரோடு பகுதிகளில், தேவையான பாலங்கள் கட்டும் திட்டத்தை உருவாக்கி, போர்க்கால அடிப்படையில் பாலங்கள் கட்டி முடிக்க வேண்டும்.நெசவாளர் குடியிருப்புவசதியின்றி தவிக்கிறதுதிருப்பூர் ஒன்றியம், வள்ளிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தமிழக அரசு ஒதுக்கீட்டில், கைத்தறி நெசவாளர்களுக்கு, பசுமை வீடுகள் கட்டப்பட்டன. ஒரே இடத்தில், 300க்கும் அதிகமான வீடுகள் கட்டி, புதிய குடியிருப்பு உருவாக்கப்பட்டது.ரேஷன் கடை, சமுதாயக்கூடம், குடிநீர் வசதி செய்யப்பட்டது. இருப்பினும், சாக்கடை கழிவுநீர் வடிகால் வசதி, தார்ரோடு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதியில்லாமல் மக்கள் தத்தளிக்கின்றனர். அப்பகுதிக்கு, சிறப்பு நிதி ஒதுக்கி அடிப்படை வசதியை மேம்படுத்த வேண்டும்.பட்டா வழங்கஇழுத்தடிப்புஉடுமலை சென்டில்மென்ட் பகுதியில், நீண்ட இழுபறிக்கு பிறகு, பழங்குடியினருக்கு மட்டும் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதேபகுதியில் வசித்த, எஸ்.சி., மக்களுக்கு வீட்டுமனை பட்டா கிடைக்கவில்லை. தமிழக அரசு, சிறப்பு கவனம் செலுத்தி, சென்டில்மென்ட் பகுதிகளில் வசிக்கும், எஸ்.சி., -எஸ்.டி., மக்கள் அனைவருக்கும் பட்டா உரிமை வழங்க வேண்டும்.அதிகாரிகளுக்கு வசதிமக்களுக்கு துயரம்அ.தி.மு.க., ஆட்சியின் போது, அதிகாரிகள் வசதிக்கேற்ப தாலுகா எல்லைகள் பிரிக்கப்பட்டதால், மக்களின் துயரம் தீர்ந்தபாடில்லை. திருப்பூர் தெற்கு தாலுகாவில் உள்ள, மங்கலம், இடுவாய், ஆண்டிபாளையம் கிராமங்களை, மீண்டும் திருப்பூர் வடக்கு தாலுகாவுடன் இணைக்க வேண்டும்.தெற்கில் உள்ள, 16 கிராமங்களில் இருந்து, மூன்று கிராமங்களை பிரித்து, வடக்கில் உள்ள ஏழு கிராமங்களுடன் இணைக்க, முதல்வர் உத்தரவிட வேண்டும். தாலுகா அலுவலகங்களுக்கு, டவுன் பஸ் வசதி, தடையில்லதொடர்ச்சி 4ம் பக்கம்
தொழிலாளர்களுக்கு
குடியிருப்பு வசதி
தமிழக அரசின் சமூகநலத்துறை சார்பில் உருவாக்கிய, பெண்கள் தங்கும் விடுதி இயங்காமல் இருக்கிறது. தொழில் நகரமாகிய திருப்பூரில், தொழிலாளர் குடும்பங்கள் தங்க, குடியிருப்பு வசதியை உருவாக்க வேண்டும். அதேபோல், மத்திய அரசிடம் வலியுறுத்தி, வடமாநில தொழிலாளர் பாதுகாப்பாக தங்கும் விடுதிகளையும் உருவாக்க வேண்டும்.கூடுதல் பொறுப்பு இருக்கிறது!
திருப்பூர் மாவட்டம் எவ்வளவு வளர்ச்சி பெற்றிருந்தாலும், அடிப்படை வசதிகளில் தன்னிறைவு பெற்றுள்ளதா என்பதை யாராலும் ஒப்புக்கொள்ள முடியாது. தி.மு.க., ஆட்சிக்காலத்தில் தான், ( 2009 பிப்., 22ல்) திருப்பூர் மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டது. அதன்படி, மாவட்டத்தை உருவாக்கிய தி.மு.க., அரசுக்கு, அதன் வளர்ச்சி மீதும், கூடுதல் பொறுப்பு இருக்கிறது என்பதை, நினைவுகூற வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE