நல்லம்மன் தடுப்பணையில் ஆர்ப்பரிக்கிறது வெள்ளம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நல்லம்மன் தடுப்பணையில் ஆர்ப்பரிக்கிறது வெள்ளம்

Added : நவ 22, 2021
Share
திருப்பூர்:நொய்யலில் மிதமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், 21 நாட்களாக, மங்கலம் நல்லம்மன் தடுப்பணையில், மழைநீர் ஆர்ப்பரித்தபடி வழிந்தோடுகிறது.கோவை - திருப்பூர் மாவட்டங்களில், தொடர்ந்து மழை பெய்து வந்ததால், குளம், குட்டைகள் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக, நொய்யல் தண்ணீரால் பயன்பெறும் குளங்கள், கடல் போல் நிரம்பியுள்ளன. நொய்யல் தடுப்பணைகளில்,
 நல்லம்மன் தடுப்பணையில் ஆர்ப்பரிக்கிறது வெள்ளம்

திருப்பூர்:நொய்யலில் மிதமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், 21 நாட்களாக, மங்கலம் நல்லம்மன் தடுப்பணையில், மழைநீர் ஆர்ப்பரித்தபடி வழிந்தோடுகிறது.கோவை - திருப்பூர் மாவட்டங்களில், தொடர்ந்து மழை பெய்து வந்ததால், குளம், குட்டைகள் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக, நொய்யல் தண்ணீரால் பயன்பெறும் குளங்கள், கடல் போல் நிரம்பியுள்ளன. நொய்யல் தடுப்பணைகளில், ஆர்ப்பரித்து கொட்டும் மழை வெள்ளம், காட்சிக்கு இனியதாக மாறியுள்ளது.ஆண்டிபாளையம் குளத்துக்கு தண்ணீர் வழங்கும், மங்கலம் நல்லம்மன் தடுப்பணை, 21 நாட்களாக நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. நொய்யல் ஆற்றின் குறுக்கே, 300 மீட்டர் நீளத்தில் உள்ள, அணைக்கட்டின் மையத்தில், நல்லம்மன் கோவில் தண்ணீரில் மூழ்கியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, மிக நீளமான நொய்யல் தடுப்பணை என்ற அந்தஸ்தை பெற்ற, நல்லம்மன் தடுப்பணை, தற்போது துாய்மையான மழைநீரால் நிரம்பியுள்ளது.பெரிய பாறைகளுக்கு மத்தியில், உபரிநீர் வழிந்தோடி, வெள்ளியை உருக்கி வார்ப்பது போல் காட்சியளிப்பதாக, பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.ஒவ்வொரு குளங்களும் நிரம்பியுள்ளதால், உபரியாக வரும் மழைநீர், நேரடியாக நொய்யலில் பாய்ந்தோடுகிறது. அதன்படி, மங்கலம் தடுப்பணையில், கடந்த, 21 நாட்களாக, தொடர்ந்து வெள்ளம் ஆர்ப்பரித்து, சென்று கொண்டிருக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X