ரஷ்ய நிறுவனத்துக்கு அமெரிக்கா எச்சரிக்கை

Updated : நவ 22, 2021 | Added : நவ 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
வாஷிங்டன்-மாலியில் செயல்பட்டு வரும் ரஷ்யாவைச் சேர்ந்த ராணுவ உபகரண தயாரிப்பு நிறுவனத்திற்கு, அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.உள்நாட்டு போர்மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் கடந்த ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கிடையே, ராணுவம் - பிரிவினைவாதிகள் இடையே உள்நாட்டு போர் நிலவி வருகிறது.இதில், ராணுவ உபகரணங்களை தயாரிக்கும் ரஷ்ய நிறுவனமான 'வாக்னர்'

வாஷிங்டன்-மாலியில் செயல்பட்டு வரும் ரஷ்யாவைச் சேர்ந்த ராணுவ உபகரண தயாரிப்பு நிறுவனத்திற்கு, அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.



latest tamil news


உள்நாட்டு போர்மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் கடந்த ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கிடையே, ராணுவம் - பிரிவினைவாதிகள் இடையே உள்நாட்டு போர் நிலவி வருகிறது.இதில், ராணுவ உபகரணங்களை தயாரிக்கும் ரஷ்ய நிறுவனமான 'வாக்னர்' குழுமம், மாலி ராணுவத்திற்கு அவற்றை வினியோகித்து வருகிறது. இது, ரஷ்ய அதிபர் புடினுக்கு நெருக்கமானவரின் குழுமம் என்பதாலும், இதன் தலையீட்டால் நாட்டில் நிலைமை மோசமாகி வருவதாலும், இதற்கு மேற்கத்திய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.


துரதிருஷ்டவசம்

இந்நிலையில், ஆப்ரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் அந்தோணி பிளின்கன் நேற்று முன்தினம் கூறியதாவது:மாலியில் உள்ள பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை நினைத்தால் கவலையாக உள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்தவர்களால் நாட்டில் நிலவும் சூழல் மேலும் மோசமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரச்னையை மேலும் சிக்கலாக்கும் வகையில் அவர்கள் செயல்படுகின்றனர். தெளிவாக கூற வேண்டும் என்றால், வாக்னர் குழுமத்தை பற்றி தான் கூறுகிறேன். சிரியா, லிபியா உள்ளிட்ட நாடுகளுக்கு ராணுவ உபகரணங்களை வினியோகித்த இந்த குழுமம், தற்போது மாலியிலும் தலைதுாக்க துவங்கி உள்ளது. அங்கு, வாக்னர் குழுமம் செயல்பட்டு வருவது துரதிருஷ்டவசமான ஒன்று.இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news



இணைந்து செயல்பட வலியுறுத்தல்!

கனடாவின் ஹாலிபாக்ஸ் பகுதியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அமெரிக்க ராணுவத்தின் மூத்த அதிகாரி ஜான் அக்விலினோ பங்கேற்று பேசினார்.அப்போது அவர் கூறியதாவது: சுதந்திரமான இந்தோ - பசிபிக் பிராந்தியத்தை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அங்கு, சீன ராணுவம் ஆதிக்கம் செலுத்தி வருவதால் அச்சுறுத்தல் நிலவி வருகிறது. எனவே அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
22-நவ-202103:23:22 IST Report Abuse
NicoleThomson நீ அன்று ஆப்கனில் ராணுவ ஆயுதங்களை கொடுத்தாய் அது கண்கூடு , இன்று அவன் , இப்படி பெரிய ஆளு என்று காட்டி கொள்ள நீங்கள் அடிக்கும் கூத்து சாமானிய மனிதர்களை வாழ விடாமல் செய்கிறது . நீங்க அழிந்து போனால் இந்த ஆயுதம் , மதம் கலாச்சாரம் எங்கேயும் இல்லாமல் அமைதி பிறக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X