10 ,008 தீபங்களால் ஒளிர்ந்தது வட்டமலை கரை அணை!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

10 ,008 தீபங்களால் ஒளிர்ந்தது வட்டமலை கரை அணை!

Added : நவ 22, 2021
Share
வெள்ளகோவில்:கனமழை பெய்தும், வெள்ளகோவில் பகுதியில் உள்ள வட்டமலைக் கரைஅணைக்கு மட்டும் இதுவரை ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர்.வட்டமலை கரை அணை 40 ஆண்டுகளுக்கு முன்பு 650 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டதாகும். தாசவநாயக்கன்பட்டி, லக்கம நாயக்கன்பட்டி, குமாரபாளையம், வடக்கு வலசு, புதுப்பை, உத்தமபாளையம் அரியாண்டிவலசு, கணபதி பாளையம்,
 10 ,008 தீபங்களால் ஒளிர்ந்தது வட்டமலை கரை அணை!

வெள்ளகோவில்:கனமழை பெய்தும், வெள்ளகோவில் பகுதியில் உள்ள வட்டமலைக் கரைஅணைக்கு மட்டும் இதுவரை ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர்.வட்டமலை கரை அணை 40 ஆண்டுகளுக்கு முன்பு 650 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டதாகும். தாசவநாயக்கன்பட்டி, லக்கம நாயக்கன்பட்டி, குமாரபாளையம், வடக்கு வலசு, புதுப்பை, உத்தமபாளையம் அரியாண்டிவலசு, கணபதி பாளையம், முத்துநாயக்கன்வலசு உட்பட 35 க்கும் மேற்பட்ட கிராம பகுதிகள் 6,043 ஏக்கர் பரப்பளவு இடது, வலது கால்வாய் மூலம் பாசன வசதி பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.அமராவதி ஆற்று உபரி நீர் மற்றும் பரம்பிக்குளம் ஆழியாறு உபரிநீர் ஆகியவற்றை வாய்க்கால் மூலமாகவோ அல்லது நீருந்து மோட்டார் மூலமாகவோ, வட்டமலை அணைக்கு தண்ணீர் கொண்டுவர ஆவன செய்ய வேண்டுமென விவசாயிகள் - பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இதை வலியுறுத்தி, வட்டமலை கரை அணையில், பத்தாயிரத்து எட்டு தீபங்கள் ஏற்றி பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X