பயணி துப்பாக்கியால் சுட்டதால் விமான நிலையத்தில் பதற்றம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
அட்லாண்டா-அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள விமான நிலையத்தில், பைகளை சோதனையிட்டபோது, பயணி ஒருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து சுட்டு தப்பியோடினார். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள ஹார்ட்ஸ்பீல்ட் ஜாக்சன் சர்வதேச விமான நிலையம், எப்போதும் பரபரப்பாக காணப்படும்.மிரட்டல்அதிக அளவில் பயணியர் நடமாட்டமுள்ள விமான

அட்லாண்டா-அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள விமான நிலையத்தில், பைகளை சோதனையிட்டபோது, பயணி ஒருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து சுட்டு தப்பியோடினார்.

இதனால் விமான நிலையத்தில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள ஹார்ட்ஸ்பீல்ட் ஜாக்சன் சர்வதேச விமான நிலையம், எப்போதும் பரபரப்பாக காணப்படும்.மிரட்டல்அதிக அளவில் பயணியர் நடமாட்டமுள்ள விமான நிலையங்களில் இதுவும் ஒன்று.விமான நிலையத்தில் நேற்று பயணியரின் பைகள் பரிசோதனை செய்யப்பட்டபோது, ஒரு பயணியின் பையில் சந்தேகத்துக்கிடமான பொருள் இருந்தது. இதையடுத்து அந்த பையை பரிசோதனை செய்ய, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் முயன்றனர். அப்போது அந்தப் பையை பிடுங்கிய பயணி, அதில் இருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து மிரட்டினார்.இதற்கிடையே அந்த துப்பாக்கி திடீரென வெடித்தது.

இதனால் விமான நிலையத்தில் இருந்த மற்ற பயணியர் அலறி அடித்து ஓடத் துவங்கினர். எங்குப் பார்த்தாலும் கூச்சல், குழப்பம் நிலவியது. இதை சாதகமாக பயன்படுத்தி அந்தப் பயணி, அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.விமான நிலையத்தில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு, விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. அனைத்து பைகளும் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டன. இதனால் இரண்டு மணி நேரத்துக்கு விமான சேவை பாதிக்கப்பட்டது.துப்பாக்கி சூட்டில் யாருக்கும் காயமேற்படவில்லை. அதே நேரத்தில் தள்ளுமுள்ளுவில் மூன்று பேர் காயமடைந்தனர்.தப்பியோடிய அந்த நபர், பழைய குற்றவாளியான கென்னி வெல்ஸ், 42, என, போலீசார் தெரிவித்துள்ளனர்.

அவரை போலீசார் தேடி வருகின்றனர். பறிமுதல்இதற்கிடையே விமான நிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட, அமெரிக்கா முழுதும் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்திஉள்ளது.இந்த விமான நிலையத்தில் இந்த ஆண்டில், செப்டம்பர் வரை, 391 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் இந்த ஆண்டில் அக்டோபர் 3ம் தேதி வரை, 4,495 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X