பொது செய்தி

இந்தியா

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண்ணாறு பாலம்: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

Updated : நவ 22, 2021 | Added : நவ 22, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
ஆந்திர மாநிலத்தின் பெண்ணாறு பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், 10 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை வழியாக, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் இடையே, சரக்கு மற்றும் பயணியர் போக்குவரத்து நடந்து வருகிறது. வாகனங்கள்

ஆந்திர மாநிலத்தின் பெண்ணாறு பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், 10 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.latest tamil news


சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை வழியாக, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் இடையே, சரக்கு மற்றும் பயணியர் போக்குவரத்து நடந்து வருகிறது. வாகனங்கள் ஸ்தம்பிப்புதினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், இச்சாலை வழியாக சென்னை வந்து செல்கின்றன. ஆந்திராவில் கன மழை கொட்டி தீர்த்ததால், நெல்லுார், சித்துார் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், நெல்லுார் அருகே கோவூர் என்ற இடத்தில், சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை குறுக்கே கட்டப்பட்டுள்ள பெண்ணாறு தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இந்த தரைப்பாலம், தங்க நாற்கர சாலை திட்டத்தின் கீழ், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியில் கட்டப்பட்டது.பாலம் உடைப்பு ஏற்பட்ட பகுதியில், நெல்லுார் மாவட்ட போலீசார் தடுப்பு அமைத்து, போக்குவரத்தை தடை செய்தனர்.


போலீசார் தடுப்பு

இதனால், நேற்று முன்தினம் இரவு முதல் தேசிய நெடுஞ்சாலை முடங்கியது. வாகனங்கள் வரிசை கட்டி நின்றதால், நெல்லுார் பகுதி ஸ்தம்பித்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திர மாநில எல்லை துவங்கும் இடத்தில் உள்ள பனங்காடு பகுதியில், நேற்று அதிகாலை ஆந்திர மாநிலம் தடா போலீசார் தடுப்பு ஏற்படுத்தினர்.


முடக்கம்

ஆந்திர எல்லையில் இருந்து, 8 கி.மீ., தொலைவில், தமிழக பகுதியான கும்மிடிப்பூண்டி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. தகவல் அறிந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், சென்னை -கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு மாநிலங்களுக்கான போக்குவரத்து முடங்கியது. நேற்று பிற்பகல், நெல்லுார் மாவட்ட நிர்வாகத்தினர், மாற்று பாதை ஏற்படுத்தி போக்குவரத்தை திருப்பி விட்டனர். அதன்பின், ஆந்திர எல்லை திறக்கப்பட்டு, தமிழக பகுதிகளில் காத்திருந்த வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

இதனால், தமிழக எல்லைக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில், 10 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.ரயில்கள் ரத்து மேலும், படுகுபாடு பகுதியில் ரயில் தண்டவாளம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால், சென்னை - விஜயவாடா பாதையில் செல்லும் 17 எக்ஸ்பிரஸ் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன. கடப்பா மாவட்டம் கமலாபுரத்தில் பாபாக்னி ஆற்றின் குறுக்கே இருந்த பாலமும் இடிந்தது. இதனால், கடப்பா மற்றும் அனந்தபூர் மாவட்டங்கள் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.கடப்பாவில் நேற்று அதிகாலை மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்தது.


latest tamil news


சம்பவம் நடப்பதற்கு சற்று முன் அங்கிருந்தோர் வெளியேறியதால், உயிரிழப்பு ஏதுமில்லை என்று அதிகாரிகள் கூறினர். ஆந்திரா முழுதும் இதுவரை மழை, வெள்ளத்திற்கு பலி யானோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.ராயல ஏரி விரிசலால்உடையும் அபாயம்திருப்பதி அருகே ராயல ஏரி உள்ளது. ஆந்திராவின் மிகப் பெரிய ஏரிகளில் இதுவும் ஒன்று. சமீபத்தில் பெய்த கன மழையால், இந்த ஏரி முழு கொள்ளளவை எட்டியது.

திருப்பதிவரலாற்றில், இந்த ஏரி முழு கொள்ளளவை எட்டியதில்லை.அதனால், கரையோரத்தில் மண்சரிவு ஏற்பட்டு நீர் கசியத் துவங்கி உள்ளதால், ஏரி அபாயகரமான கட்டத்தில் உள்ளது. ஏரி உடைந்தால், சுற்றுப் பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது.இதையடுத்து, இந்த கிராமங்களில் வசிப்போரை, பாதுகாப்பான இடங்களுக்கு அதிகாரிகள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

- நமது நிருபர் குழு -

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
22-நவ-202111:39:39 IST Report Abuse
Sampath Kumar வாஜு பாய் கட்டினது உடைந்து பூச்சு அச்சசோ மற்ற அரசியில் கட்சி காரணம் எல்லாம் அவல் மென்ற செய்தி சும்மாவே வரும் வாயில் மென்று துப்புவார்கள் இனி கேக்க வேண்டாம்
Rate this:
22-நவ-202111:50:19 IST Report Abuse
அப்புசாமிஅப்பிடி இல்லே தலிவா... 2014 க்கு முன்னாடி கட்டுன எது இடிஞ்சு உழுந்தாலும் நேருவோட தவறுதான். வாஜ்பாய், அத்வானி எல்லோருமே காங்குரசிட பினாமிதான் சொல்ல எத்தனை நேரம் ஆகும்? நம்ம ஆட்டுக்குட்டியை கேட்டா உடனே சொல்லிடுவார்....
Rate this:
வந்தியதேவ வல்லவரையன் - பல்லவ நாடு,இந்தியா
22-நவ-202113:13:35 IST Report Abuse
வந்தியதேவ வல்லவரையன்////வாஜு பாய் கட்டினது/// யாருக்கு சொல்றது முன்னாடி, முந்திரி கொட்டை மாதிரி கமெண்ட் போடக்கூடாது... வாஜ்பாயை யாரும் தூற்ற மாட்டார்கள்.. இந்தியாவில் பிரதமர்களில் மக்கள் கஷ்டப்படக்கூடாது என்று நினைத்தவர்களில் அவரும் ஒருவர். ஏழைகள் வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்று எண்ணியவர், அதனை செயல்படுத்திட பாடுபட்டவர். நாடும் முன்னேற வேண்டும், அதேநேரத்தில் நாட்டிலுள்ள ஏழை, நடுத்தர மக்களை கஷ்டப்படுத்தி இந்தியாவை முன்னேற்ற வேண்டும் என்று எண்ணாதவர். உலக அரங்கில் இந்தியாவை... நாட்டு மக்களை கஷ்டப்படுத்தாமல் உயர்த்தி காட்டியவர். அவரை பத்தி உன்னை மாதிரி கேணயனுங்கதான் ......
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
22-நவ-202109:33:05 IST Report Abuse
duruvasar தேர்தல் வாக்குறுதி படி ஒரு சொட்டு நீர் கூட கடலில் கலக்காமல் திறமையாக கையாண்ட திமுக தலைவர் ஸ்டாலினை புகழ்ந்து ஒரு வரி எழுதியிருக்கலாம். இந்த மழை அடிமை பழனிச்சாமி செய்த அவலங்களை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது என்றால் அது மிகையாகாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X