பொது செய்தி

தமிழ்நாடு

நீலகிரி மண்டலத்தில் இரு கோட்டங்கள் இணைப்பு

Added : நவ 22, 2021
Share
Advertisement
கூடலுார்:நீலகிரி மண்டலத்தில், இரு வனக்கோட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன.நீலகிரியில், முதுமலை புலிகள் காப்பகம்; கூடலுார் வனகோட்டம்; நீலகிரி வனக் கோட்டம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இதில், முதுமலை மட்டும், புலிகள் காப்பக கள இயக்குனர் பொறுப்பில் உள்ளது. கூடலுார் மற்றும் நீலகிரி வன கோட்டங்கள், கோவை மண்டல வன பாதுகாவலர் கட்டுபாட்டில் இருந்து வருகிறது.இந்நிலையில், நிர்வாக

கூடலுார்:நீலகிரி மண்டலத்தில், இரு வனக்கோட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன.நீலகிரியில், முதுமலை புலிகள் காப்பகம்; கூடலுார் வனகோட்டம்; நீலகிரி வனக் கோட்டம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இதில், முதுமலை மட்டும், புலிகள் காப்பக கள இயக்குனர் பொறுப்பில் உள்ளது. கூடலுார் மற்றும் நீலகிரி வன கோட்டங்கள், கோவை மண்டல வன பாதுகாவலர் கட்டுபாட்டில் இருந்து வருகிறது.இந்நிலையில், நிர்வாக வசதிக்காக, தமிழக வனத்துறை புதிதாக, நீலகிரி வன மண்டலத்தை உருவாக்கி, அதில், கூடலுார்; நீலகிரி வன கோட்டங்களை இணைத்துள்ளது.நீலகிரி மண்டல வனப்பாதுகாவலர் பொறுப்பு, முதுமலை கள இயக்குனருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான செயல்பாடுகள் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.முதுமலை கள இயக்குனர் வெங்டேஷ் கூறுகையில்,'' நிர்வாக வசதிக்காக, இரு வன கோட்டங்கள், முதுமலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனினும், இவற்றின் பரப்பரளவிலும், வன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செயல்பாடுகளிலும் எந்த மாற்றமும் இருக்காது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X