பொது செய்தி

தமிழ்நாடு

ஹெத்தையம்மன் திருவிழா துவங்கியது விரதம்

Added : நவ 22, 2021
Share
Advertisement
கோத்தகிரி:நீலகிரியில் படுக சமுதாய மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழாவுக்கான விரதம் துவங்கியது.கோத்தகிரி மற்றும் தொதநாடு பகுதியில் 'சக்கலாத்தி' பண்டிகையுடன், ஒருசேர 'லட்ச தீபம்' பண்டிகை நேற்று முன்தினம் நிறைவடைந்ததது. படுக மக்கள் வசிக்கும் கிராமங்களில் காப்பு கட்டப்பட்டு, வாசலில் கோலம் வரைந்து, வீடுகளில் இருந்து சேகரித்த உணவு வகைகள் முன்னோர்களுக்கு
 ஹெத்தையம்மன் திருவிழா துவங்கியது விரதம்

கோத்தகிரி:நீலகிரியில் படுக சமுதாய மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழாவுக்கான விரதம் துவங்கியது.கோத்தகிரி மற்றும் தொதநாடு பகுதியில் 'சக்கலாத்தி' பண்டிகையுடன், ஒருசேர 'லட்ச தீபம்' பண்டிகை நேற்று முன்தினம் நிறைவடைந்ததது. படுக மக்கள் வசிக்கும் கிராமங்களில் காப்பு கட்டப்பட்டு, வாசலில் கோலம் வரைந்து, வீடுகளில் இருந்து சேகரித்த உணவு வகைகள் முன்னோர்களுக்கு படையல் வைக்கப்பட்டது.அத்துடன், ஒருசேர கோவில் கல்துாணில் லட்ச தீபம் ஏற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. இந்த பண்டிகை நிறைவடைந்த நிலையில், டிச., கடைசி வாரத்தில் நடைபெறும் ஹெத்தையம்மன் திருவிழாவுக்கான விரதம் துவங்கியது. ஹெத்தையம்மன் கோவில் அமைந்துள்ள அனைத்து கிராமங்களிலும், செங்கோல் பக்தர்கள் உட்பட, குடும்பத்தினர் மற்றும் ஊர்மக்கள், 48 நாட்கள் விரதம் கடைப்பிடித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X