இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்': கடைக்குள் புகுந்து பழங்களை ருசி பார்த்த யானை

Updated : நவ 22, 2021 | Added : நவ 22, 2021
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்சம்பளம் கேட்டவர் கை துண்டிப்புரேவா: மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளி அசோக் சாகேத், 45. இவர், அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் கணேஷ் மிஸ்ராவிடம், சம்பள நிலுவை தொகையை கேட்க நேற்று சென்றார். அப்போது ஏற்பட்ட தகராறில் கணேஷ் மிஸ்ரா மற்றும் அவரது இரு சகோதரர்கள், அசோக்கின் ஒரு கையை துண்டித்தனர். மருத்துவமனையில்
இன்றைய கிரைம், ரவுண்ட், அப்


இந்திய நிகழ்வுகள்சம்பளம் கேட்டவர் கை துண்டிப்பு

ரேவா: மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளி அசோக் சாகேத், 45. இவர், அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் கணேஷ் மிஸ்ராவிடம், சம்பள நிலுவை தொகையை கேட்க நேற்று சென்றார். அப்போது ஏற்பட்ட தகராறில் கணேஷ் மிஸ்ரா மற்றும் அவரது இரு சகோதரர்கள், அசோக்கின் ஒரு கையை துண்டித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அசோக்கிற்கு, அறுவை சிகிச்சை வாயிலாக கை இணைக்கப்பட்டாலும், அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கணேஷ் மிஸ்ரா மற்றும் அவரது சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.

ரூ.100 கோடி கறுப்பு பணம்

புதுடில்லி: குஜராத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனத்திற்கு சொந்தமாக குஜராத் மற்றும் மும்பையில் உள்ள 20க்கும் மேற்பட்ட இடங்களில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் அந்நிறுவனம் கணக்கில் காட்டாமல் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கறுப்பு பணம் பதுக்கியது தெரியவந்துள்ளது. சோதனையில் 2.5 கோடி ரூபாய் பணம் மற்றும் 1 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது


latest tamil news


ஆசிட் வீசிய கள்ளக்காதலி: பார்வை இழந்த காதலன்
மூணாறு,--கேரளாவில் மூணாறு அருகே, கள்ளக்காதலி 'ஆசிட்' வீசியதில் கள்ளக்காதலனின் பார்வை பறிபோனது.கேரள மாநிலம் மூணாறு அருகேயுள்ள அடிமாலி பலிசக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஷீபா 37. திருவனந்தபுரத்தில் நர்சாக பணியாற்றியபோது அருண்குமார், 27, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்தனர். இந்நிலையில் ஷீபாவுக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளதாக அருண்குமாருக்கு தெரியவந்தது.

அவருடனான உறவை கைவிட்ட அருண்குமார், வேறு பெண்ணை திருமணம் செய்ய தயாரானார்.இதையறிந்த ஷீபா, 'காதலித்தபோது கொடுத்த பணத்தை திரும்ப தர வேண்டும்; இல்லாவிட்டால் போலீசில் புகாரளிப்பேன்' என்றார். பேச்சுவார்த்தைக்காக அருண்குமாரை அங்கிருந்த பாலத்திற்கு வரவழைத்தார். இருவரும் பேசியபோது வாக்குவாதம் ஏற்பட்டது.ஆத்திரமடைந்த ஷீபா மறைத்து வைத்திருந்த ஆசிட்டை அருண்குமார் முகத்தில் வீசினார்.

அவருக்கு ஒரு கண் பார்வை பறிபோனது.அவர் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஷீபாவை போலீசார் கைது செய்தனர். ஆசிட் வீசியபோது ஷீபாவுக்கும் முகத்தில் காயம் ஏற்பட்டதால் ,அவர் கோட்டயம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.


தமிழக நிகழ்வுகள்


latest tamil news


Advertisement

கடைக்குள் புகுந்து பழங்களை ருசித்த யானை: வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
பந்தலுார்;பந்தலுார் சேரம்பாடி பஜாரில் கடைக்குள் புகுந்த காட்டுயானை பழங்களை உட்கொண்டு, வாழை தாருடன் சென்றது.பந்தலுார் அருகே, சேரம்பாடி பஜார் பகுதிக்கு அடிக்கடி, ஒற்றை யானை விசிட் செய்து வருகிறது. நேற்று அதிகாலை, 4:00 மணியளவில், பஜார் பகுதிக்கு வந்த யானை செரீப் என்பவரது பழக்கடைக்கு வந்துள்ளது. கடையை 'பிளாஸ்டிக்' சாக்கு பையால் மூடி வைத்திருந்த நிலையில், அதனைக் கிழித்து, கடையில் வைத்து இருந்த பழங்களை ருசிபார்த்து உள்ளது. தகவலறிந்த, இளைஞர்கள் யானையை விரட்ட முயற்சி செய்தனர். ஆனால் இதனை கண்டுகொள்ளாத ஒற்றை யானை தொடர்ந்து பழங்களை உட்கொண்டது. பின்னர், ஒரு வாழை தாருடன் சாலைக்கு மறுபுறம் சென்ற யானை, அதனை ருசி பார்த்தது. மீண்டும் கடைக்கு வந்துள்ளது. தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து யானையை அருகில் உள்ள சாலை வழியாக வன பகுதிக்கு விரட்டினர்.இந்நிலையில், வியாபாரிகள் நேற்று காலை திடீர் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து, வனச்சரகர் ஆனந்தகுமார், சம்பவ இடத்திற்கு சென்று வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில்,'பாதிக்கப்பட்ட வியாபாரிக்கு நிவாரணம் பெற்று தரப்படும். யானை வருவதை தெரிவிக்க இப்பகுதியில் அலாரம் வைக்கப்படும்,' என, தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்று கொண்ட வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டனர்

பைக் மோதி முதியவர் பலி

உடுமலையை சேர்ந்தவர் ரவி, 60, பனியன் தொழிலாளி. திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் தனியாக வசித்து வந்தார். கடந்த 14ம் தேதி குடிபோதையில் ரோட்டை கடக்க முயன்றார். பைக் மோதி படுகாயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இறந்தார். வேலம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


latest tamil news


நீரில் மூழ்கி மாணவர் பலி

அலங்காநல்லுார்: வலசை சுந்தராஜபுரம் கூலி தொழிலாளி மலைராஜா மகன் சோனை 9, அங்குள்ள பள்ளியில் 4 ம் வகுப்பு படித்தார். நேற்று மதியம் வாடிப்பட்டி-தாமரைப்பட்டி நான்குவழிச்சாலையில் பாலம் கட்ட 2 ஆண்டுகளுக்கு முன் தோண்டப்பட்ட 20 அடி பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் மூழ்கி இறந்து கிடந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

இரு மகன்களுடன் இளம் பெண் மாயம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் சிகில் ராஜவீதி வெற்றிலைக்கார தெருவை சேர்ந்தவர் பீர் முகம்மது 36. மளிகை கடையில் வேலை செய்கிறார். நேற்றுமுன்தினம் இரவு 9:00 மணிக்கு கடையில் வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற போது வீடு பூட்டி இருந்தது.மனைவி தஸ்லிம்ராணி 26, மகன்கள் முகமது இதிரிஷ் 9, முகமது ரியாஸ் 4, ஆகியோரை காணவில்லை. விசாரித்த போது இரண்டு மகன்களுடன் மருத்துவமனைக்கு செல்வதாக கூறி சென்றதாக தெரிவித்தனர். நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் ராமநாதபுரம் பஜார் போலீசில் பீர்முகம்மது புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


latest tamil newsஅதிவேக வாகனத்தில் சிக்கிய சிறுத்தை பலி

சத்தியமங்கலம்-ஆசனுார் வனப் பகுதியில், வாகனம் மோதியதில் பெண் சிறுத்தை பலியானது.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதி, சத்தி - மைசூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது. இதனால் சாலையை கடந்து சிறுத்தை, புலி, யானை உள்ளிட்ட விலங்குகள் செல்வது வாடிக்கை. ஆசனுார் வனக் கோட்டம், பிணக்கஹள்ளி காவல் சுற்று அருகே, அடர்ந்த வனப்பகுதி சாலையில், ஒரு சிறுத்தை நேற்று இறந்து கிடந்தது. வாகன ஓட்டிகள் தகவலின் அடிப்படையில், ஆசனுார் வனத் துறையினர் உடலை மீட்டனர். 2 வயதான பெண் சிறுத்தை என்பதும், வாகனம் மோதியதில் பலியானதும் தெரிந்தது.வனப் பகுதி சோதனைச் சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை கொண்டு, சிறுத்தை பலிக்கு காரணமான வாகனத்தை தேடும் பணி நடக்கிறது.

கார் கவிழ்ந்து இருவர் பலி

மானாமதுரை-மானாமதுரை அருகே கார் கவிழ்ந்து, இளம்பெண் உட்பட இருவர் பலியாகினர்.சிவகங்கை மாவட்டம், நல்லாண்டிபுரம் டி.நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன், 45. கோவை சேரன் மாநகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் குடும்பத்தினர், உறவினர்கள் 10 பேருடன், இன்னோவா காரில் கோவையில் இருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு, மானாமதுரை அருகே தாயமங்கலம் கோவிலுக்கு வந்தார்.

குமார், 27, என்பவர் காரை ஓட்டி வந்தார்.நேற்று அதிகாலை 5:30 மணிக்கு, கார் மானாமதுரை அடுத்து மாங்குளம் குப்பைக்கிடங்கு அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் அய்யப்பன் மகள் ஆர்த்தி, 17, உறவினர் பாண்டி, 45, ஆகிய இருவர் பலியாகினர்.அய்யப்பன், டிரைவர் குமார் உட்பட எட்டு பேர் காயமடைந்து, சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பைக் விபத்து

சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடியைச் சேர்ந்த மாதவன் மனைவி சரஸ்வதி, 50. இவர் கொல்லங்குடி மினி கிளினிக்கில் தடுப்பூசி போட்டு நேற்று வீட்டிற்கு நடந்து சென்றார். நாட்டரசன் கோட்டையைச் சேர்ந்த கொத்தனார் கமலக்கண்ணன், 30, டூ - வீலரை ஓட்டி வந்தார். அவரது நண்பர் சுப்புரத்தினம், 32, பின்னால் அமர்ந்து வந்தார்.கொல்லங்குடி விலக்கு அருகே, டூ - வீலர், நடந்து வந்த சரஸ்வதி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயேசரஸ்வதியும், சுப்புரத்தினமும் பலியாகினர். கமலக்கண்ணன் காயங்களுடன் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.


latest tamil news


'வீடியோ கேம்' தோல்வி இன்ஜி., வாலிபர் தற்கொலை
புதுச்சேரி-தொடர்ந்து 'வீடியோ கேம்' ஆடி தோற்றதால் மனமுடைந்த இன்ஜினியரிங் பட்டதாரி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி, வில்லியனுார் அடுத்த மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் தீபக், 22; சிவில் இன்ஜினியர். இவர், கடந்தாண்டு கொரோனா காலத்தில் இருந்து, வீட்டின் மாடியில் உள்ள தன் அறையில் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போனில் தனியாக மணிக்கணக்கில் 'வீடியோ கேம்' ஆடி வந்துள்ளார்.சில நாட்களாக வீடியோ கேமில் தோல்வியை சந்தித்ததால், இரு தினங்களாக மிகுந்த டென்ஷனாகஇருப்பதாக வீட்டில் இருப்பவர்களிடம் கூறி உள்ளார்.

நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில், தன் அறையில் உள்பக்கமாக தாழிட்டு, துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் கூறுகையில், 'பெற்றோர், தங்கள் பிள்ளைகளை மிக அதிக நேரம் மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டரில் கேம் ஆட அனுமதிக்க கூடாது. நீண்ட நேரம் பிள்ளைகள் தனிமையில் இருக்கவும் அனுமதிக்க வேண்டாம்' என்றனர்.


உலக நிகழ்வுகள்

படகு கவிழ்ந்து 75 அகதிகள் பலி

ரோம்: ஆப்ரிக்க மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகளில் இருந்து ஏராளமான மக்கள், ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர். இதற்காக அவர்கள் கடலில் ஆபத்தான முறையில் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் லிபியா நாட்டின் வடக்கில் அமைந்துள்ள மத்திய தரைக்கடலில் நேற்று முன்தினம் அகதிகளுடன் சென்ற படகு, கடலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில், 75 அகதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 15 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர்.

பயணி துப்பாக்கியால் சுட்டதால் விமான நிலையத்தில் பதற்றம்
அட்லாண்டா-அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள விமான நிலையத்தில், பைகளை சோதனையிட்டபோது, பயணி ஒருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து சுட்டு தப்பியோடினார். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள ஹார்ட்ஸ்பீல்ட் ஜாக்சன் சர்வதேச விமான நிலையம், எப்போதும் பரபரப்பாக காணப்படும்.மிரட்டல்அதிக அளவில் பயணியர் நடமாட்டமுள்ள விமான நிலையங்களில் இதுவும் ஒன்று.விமான நிலையத்தில் நேற்று பயணியரின் பைகள் பரிசோதனை செய்யப்பட்டபோது, ஒரு பயணியின் பையில் சந்தேகத்துக்கிடமான பொருள் இருந்தது. இதையடுத்து அந்த பையை பரிசோதனை செய்ய, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் முயன்றனர். அப்போது அந்தப் பையை பிடுங்கிய பயணி, அதில் இருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து மிரட்டினார்.இதற்கிடையே அந்த துப்பாக்கி திடீரென வெடித்தது.இதனால் விமான நிலையத்தில் இருந்த மற்ற பயணியர் அலறி அடித்து ஓடத் துவங்கினர்.

எங்குப் பார்த்தாலும் கூச்சல், குழப்பம் நிலவியது. இதை சாதகமாக பயன்படுத்தி அந்தப் பயணி, அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.விமான நிலையத்தில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு, விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. அனைத்து பைகளும் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டன. இதனால் இரண்டு மணி நேரத்துக்கு விமான சேவை பாதிக்கப்பட்டது.துப்பாக்கி சூட்டில் யாருக்கும் காயமேற்படவில்லை. அதே நேரத்தில் தள்ளுமுள்ளுவில் மூன்று பேர் காயமடைந்தனர்.தப்பியோடிய அந்த நபர், பழைய குற்றவாளியான கென்னி வெல்ஸ், 42, என, போலீசார் தெரிவித்துள்ளனர். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பறிமுதல்

இதற்கிடையே விமான நிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட, அமெரிக்கா முழுதும் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்திஉள்ளது.இந்த விமான நிலையத்தில் இந்த ஆண்டில், செப்டம்பர் வரை, 391 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் இந்த ஆண்டில் அக்டோபர் 3ம் தேதி வரை, 4,495 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X