பொது செய்தி

தமிழ்நாடு

ஏழு இடங்களில் மரங்களை காணோம்! பொகலூர் ஊராட்சியில் 'பொங்கியது' புகார்

Added : நவ 22, 2021
Share
Advertisement
அன்னுார்:பொகலுார் ஊராட்சியில் பணி செய்த இடத்தில் தகவல் பலகை நிறுவாதது என்பன உள்ளிட்ட, 14 குறைகள் தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அன்னுார் அருகே பொகலுார் ஊராட்சியில், கடந்த, 2019--20ம் நிதியாண்டில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், ஒரு கோடியே, 55 லட்சத்து, 73 ஆயிரம் ரூபாய் செலவில், 73 பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் குறித்து, சமூக தணிக்கை அறிக்கை வாசிக்கும் சிறப்பு
 ஏழு இடங்களில் மரங்களை காணோம்! பொகலூர் ஊராட்சியில் 'பொங்கியது' புகார்

அன்னுார்:பொகலுார் ஊராட்சியில் பணி செய்த இடத்தில் தகவல் பலகை நிறுவாதது என்பன உள்ளிட்ட, 14 குறைகள் தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அன்னுார் அருகே பொகலுார் ஊராட்சியில், கடந்த, 2019--20ம் நிதியாண்டில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், ஒரு கோடியே, 55 லட்சத்து, 73 ஆயிரம் ரூபாய் செலவில், 73 பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் குறித்து, சமூக தணிக்கை அறிக்கை வாசிக்கும் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்றுமுன்தினம் பொகலுாரில் நடந்தது.வட்டார வள அலுவலர் சந்திரசேகரன் வாசித்த தணிக்கை அறிக்கையில், 'பணிகள் செய்யப்பட்ட ஏழு இடங்களில் என்னென்ன பணிகள், எவ்வளவு மதிப்பீட்டில் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் பலகை வைக்கவில்லை. மரக்கன்றுகள் நட, 1.5 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது; ஆனால், மரக்கன்றுகள் இல்லை. அளவு பதிவேட்டில் குறிப்பிட்ட அளவைவிட பணி செய்யப்பட்ட இடத்தில் குறைவாகவே அளவுகள் உள்ளன' என்பன உள்பட, 14 குறைபாடுகள் தெரிவிக்கப்பட்டன.அதிகாரிகள் பதிலளிக்கையில், 'அத்திக்கடவு திட்டத்திற்காக குழாய் பதிக்க நடப்பட்ட மரக்கன்றுகள் அப்புறப்படுத்தப்பட்டன. மழை, மண் சரிவு, கால்நடை மேய்த்தல் ஆகிய காரணங்களால் சில இடங்களில் அளவீடு குறைந்துள்ளது. தகவல் பலகை இல்லாத இடங்களில் வைக்கப்படும்' என்றனர்.தொழிலாளர்கள் பேசுகையில், 'ஆண்டுக்கு, 100 நாள் மட்டும் வேலை கிடைப்பதால் வாழ்க்கை நடத்துவது சிரமமாக உள்ளது. எனவே, பணி நாட்களை, 150 ஆக உயர்த்த வேண்டும்' என்றனர்.கூட்டத்தில், ஊராட்சி தலைவர் நடராஜன், துணைத் தலைவர் சதீஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X