பொது செய்தி

இந்தியா

சபரிமலையில் பக்தர்களை அகற்ற பினராயி கம்யூ., அரசு முயற்சி; பா.ஜ., குற்றச்சாட்டு

Updated : நவ 22, 2021 | Added : நவ 22, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சபரிமலை-சபரிமலையில் இருந்து பக்தர்களை அகற்ற கூட்டு முயற்சி நடக்கிறது, இதற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும், என கேரள மாநில பா.ஜ., முன்னாள் தலைவர் கும்மனம் ராஜசேகரன் கூறினார்.நிலக்கல்லில் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் பற்றி ஆய்வு செய்த பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:பக்தர்களுக்கு நெருக்கடி கொடுத்தும், வேதனை ஏற்படுத்தியும் அவர்களை சபரிமலையில்

சபரிமலை-சபரிமலையில் இருந்து பக்தர்களை அகற்ற கூட்டு முயற்சி நடக்கிறது, இதற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும், என கேரள மாநில பா.ஜ., முன்னாள் தலைவர் கும்மனம் ராஜசேகரன் கூறினார்.latest tamil news


நிலக்கல்லில் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் பற்றி ஆய்வு செய்த பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:பக்தர்களுக்கு நெருக்கடி கொடுத்தும், வேதனை ஏற்படுத்தியும் அவர்களை சபரிமலையில் இருந்து அகற்றி நிறுத்த பினராயி விஜயனின் கம்யூ., அரசும், தேவசம்போர்டும் சேர்ந்து முயற்சி செய்கிறது. ஹலால் சர்க்கரை கொண்டு வந்ததும், தீர்த்ததை வாங்கிய அமைச்சர் அதை அவமரியாதை செய்ததும் பக்தர்களை வேதனை படுத்த திட்டமிட்டு செய்தது.


latest tamil news


நிலக்கல், பம்பை, சன்னிதானத்தில் பக்தர்களுக்கு குறைந்த பட்ச வசதிகள் கூட செய்யப்படவில்லை.பக்தர்களுக்கு தேவையான பஸ்கள் இல்லை. உணவு சாப்பிடவும், தங்கி ஓய்வு எடுக்கவும் வசதிகள் இல்லை. விருச்சுவல் கியூ என்ற பெயரில் பல மணி நேரம் காக்க வைக்கப்படுகின்றனர். பக்தர்களுக்கு முடிந்த அளவு சிரமம் கொடுக்கும் அரசின் அஜன்டாவை அதிகாரிகள் செயல்படுத்துகின்றனர். யாரும் சபரிமலை வராமல் இருக்க செய்யும் தந்திரமாகதான் பார்க்க வேண்டியுள்ளது. வரும் நாட்களில் இது தொடர்ந்தால் பா.ஜ., சார்பில் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
22-நவ-202116:21:30 IST Report Abuse
jayvee SDPI ஆளும் மாநிலத்தில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ?
Rate this:
Cancel
VASEEGARAN - BANGALORE,இந்தியா
22-நவ-202113:40:20 IST Report Abuse
VASEEGARAN சபரிமலைக்கே போகாதவனுங்க தான் இங்க விமர்சனம் எழுதறானுங்க. ஒருமுறையாவது அங்க போய் பார்த்துட்டு உங்க நொண்ண விமர்சத்தை எழுதுங்க. மலைக்கு தனியார் அல்லது சொந்த வாகனத்தில் போறவனுங்களுக்கு ஒரு கஷ்டமும் இல்லை. ட்ரைன்லயோ அல்லது பஸ்லயோ செங்கண்ணுர் அல்லது கோட்டயம் வரை போய் அங்கிருந்து மலைக்கு கேரளா பஸ்ல போய் பாருங்க. உண்மை நிலவரம் தெரியும். பம்பைல ஒரு அத்தியாவசிய வசதியும் கிடையாது. தரித்திரம் பிடிச்ச கேரளா தேவசம் போர்டுக்கு எவ்ளோ வருமானம் வந்தாலும் பத்தாது. மழை வந்தால் ஒதுங்க கூட ஒரு இடம் இருக்காது. வெயில் அடிச்சா நிற்க ஒரு இடம் இருக்காது. ஒரு டாய்லேட் இருக்காது. குடிக்க தண்ணி இருக்காது. எந்த கோவெர்மென்ட் பஸ் எங்க போகுதுன்னு சொல்ல மாட்டானுங்க மணிக்கணக்கா நின்ன பின்னாடி திடிர்ன்னு பஸ் எங்க போகுதுன்னு சொல்லுவானுங்க. அப்ப எல்லாம் ஓடி போய் இடம் பிடிப்பாங்க. சீட் இல்லைன்னா மறுபடி காத்து இருக்கணும். தனியார் வாகனத்தில் போனால் பிரச்சனை இல்லை. மலைல கேரளாகாரனுக்கு சலுகை அதிகம். பத்து பைசா கூட தராத அவங்களுக்கு ஸ்பெஷல் என்ட்ரி உண்டு.. ஆனா கோடிகனுக்குல காசு குடுக்கற தமிழ்நாட்டு ஆளுங்க, ஆந்திராகாரனுங்கள ஒரு மனுசனா கூட மதிக்க மாட்டானுங்க. அப்படியே வர வருமானத்தை எந்த வசதியும் சபரிமலை கோவிலுக்கு செய்யாமல் மத்த கேரளா கோவிலுக்கு அதன் நிர்வாக வசதிகளுக்கு அனுப்பறாங்க.. மொதல்ல சபரிமலைக்கு செலவு பண்ணுங்க.. முக்கிய வசதிகள் எதுவுமே இல்லாதப்பவே நம்ம ஆளுங்க இப்படி குமியாரானுங்க இவனுங்களுக்கு திருப்பதி மாதிரி வசதி செய்து குடுத்தா அவ்ளோ தான் கைலயே பிடிக்க முடியாது. அப்படி குமியருதுல நானும் ஒருத்தன் தான். வருடத்திற்கு மூன்று முறை அரசாங்க பஸ்சில் செங்கண்ணுரில் இருந்து கேரள பஸ்சில் போவதால் எழுதுகிறேன். நிஜமாவே ஒரு முறையாவது சபரிமலைக்கு சொந்த வாகனம் அல்லாமல் கேரளா பஸ்ல போனவங்க நான் சொல்றது சரியா தப்பான்னு சொல்லுங்க. இது வரை மலைக்கு போகாத யாரும் இங்க கருத்து வாந்தி எடுக்காதீங்க. மேல இருக்கற கட்டுரை நூறு சதவிகிதம் உண்மை..
Rate this:
Cancel
S Regurathi Pandian - Sivakasi,இந்தியா
22-நவ-202113:13:49 IST Report Abuse
S Regurathi Pandian சபரிமலைக்கு சென்று வந்தவர்கள் நன்றாக உள்ளது என்று சொல்கின்றனர். தரிசனம் இதுவரை இப்படிக்கு கண்டதில்லை என்கின்றனர். அதே நேரம் இவர்களோ சாமியை நாங்கள் காப்பாற்றப் போகிறோம் என்பது போல் பேசுகின்றனர். எல்லாவற்றையும் சபரிமலை அய்யப்பன் பார்த்துக்கொள்வார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X