பொது செய்தி

தமிழ்நாடு

மானிய விலையில் 'கோ 6' விதை தோட்டக்கலைத் துறை அழைப்பு

Added : நவ 22, 2021
Share
Advertisement
சூலுார்:சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட பீடம்பள்ளி, காங்கயம்பாளையம், காடாம்பாடி, ராசிபாளையம், கரவழி மாதப்பூர், காடுவெட்டிபாளையம், மயிலம்பட்டி உள்ளிட்ட ஏழு ஊராட்சிகளில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏழு கிராம விவசாயிகள் 'கோ 6' எனும் சின்ன வெங்காய விதையை, மானிய விலையில் பெற்று பயன்பெறலாம் என தோட்டக்கலை

சூலுார்:சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட பீடம்பள்ளி, காங்கயம்பாளையம், காடாம்பாடி, ராசிபாளையம், கரவழி மாதப்பூர், காடுவெட்டிபாளையம், மயிலம்பட்டி உள்ளிட்ட ஏழு ஊராட்சிகளில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏழு கிராம விவசாயிகள் 'கோ 6' எனும் சின்ன வெங்காய விதையை, மானிய விலையில் பெற்று பயன்பெறலாம் என தோட்டக்கலை துறை அழைப்புவிடுத்துள்ளது. சூலுார் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் நந்தினி அறிக்கை:அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ், சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏழு கிராமங்களில் உள்ள சிறு, குறு விவசாயிகள், ஆதி திராவிட விவசாயிகளுக்கு, 'கோ 6' எனும் சின்ன வெங்காய விதை, மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. சிட்டா, அடங்கல், உரிமைச்சான்று, இரு புகைப்படங்கள், ஆதார் மற்றும் ரேஷன் கார்டு நகல் ஆகியவற்றுடன் விருப்பம் உள்ள விவசாயிகள், சூலுார் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.விவசாயிகள், மானிய விலையில் விதை பெற்று பயன்பெறலாம். மேலும், விபரங்களுக்கு, துணை தோட்டக்கலைத் துறை அலுவலர் சேகர், 99442 64889, உதவி அலுவலர் தியாகராஜன், -97865 55569 ஆகியோரை குறிப்பிட்டுள்ள மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X